தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தளபதி 68’ படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், “எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்” என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
‘Welcome to the future’ says in Venkat Prabhu gave an update on ‘Thalapathy 68’