‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marina Protest Jallikattuஜல்லிக்கட்டுக்கு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

நாளை நடைபெற உள்ள இப்போட்டியை துவங்க வைக்க இன்று இரவு மதுரை செல்லவிருக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு வந்த உடன் நடத்தி விடமுடியாது. அதற்கான நேரம் எல்லாம் பார்க்க வேண்டும்.

ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் இது அவசர சட்டம் மட்டும்தான். நிரந்தர சட்டம் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதே கருத்தை மெரினாவில் போராடும் புரட்சி இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் காட்சிப்படுத்தப்படாத விலங்காக காளையை அறிவிக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும்.

அதுவரை போராட்டக்காரர்கள் யாரும் கலைய வேண்டாம் என அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இதுபோன்றே கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் போராடும் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidyasagar-raoஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்க இன்று சென்னை வந்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

அதன்படி சற்றுமுன் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.

வருகிற ஜனவரி 23ஆம் தேதி இதற்கான சட்டம் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொல்லப்படுகிறது.

எனவே இன்று இரவு மதுரைக்கு சென்று நாளை ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கவிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

மேலும் ஓரிரு தினங்களில் மற்ற மாவட்டங்களுக்கு மற்ற அமைச்சர்கள் நேரில் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

குறிப்பு : இந்த சட்டம் குறைந்தபட்சம் 6 மாத காலம் அமலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Tamil Nadu Governor Vidyasagar Rao Issued Ordinance on Jallikattu

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு விஜய் எப்படி வந்தார் தெரியுமா?

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு விஜய் எப்படி வந்தார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay at marinaஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என இளைஞர்கள் போராடியதற்கு வீடியோ பதிவில் விஜய் ஆதரவு குரல் கொடுத்திருந்தார்.

அதன்பின்னர் நடிகர் சங்கம் தொடர்பான நடத்தப்பட்ட மௌன போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம் கலந்து கொண்டபோதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரைக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் தன் முகத்தை மறைத்தபடியே மக்களோடு மக்களாக அவர் 2 மணி நேரம் அமர்ந்துள்ளார்.

தன்னை மக்கள் கண்டு கொண்டுவிட்டால் போராட்டம் திசை மாறும் என்பதால் விஜய் அப்படி செய்தாராம்.

ஆனால் சில ரசிகர்கள் கண்டுக் கொண்டு விஜய்யை போட்டோ பிடித்து இணையத்தில் பதிவேற்றியது தனிக்கதை.

Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach

ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்திற்கு கமலின் ‘ஆத்திசூடி’ அட்வைஸ்

ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்திற்கு கமலின் ‘ஆத்திசூடி’ அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் இதுகுறித்து ஆத்திசூடியில் உள்ள ஊக்கமது கைவிடேல் என்பதை கூறி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஊக்கமது கைவிடேல் என்றால் எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று பொருள்படும்.

அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan ‏@ikamalhaasan
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.

Kamal Haasan ‏@ikamalhaasan

Bravo. People of Tamilnadu. This agitation is a sample of our discontent. No more band-aids. Heal the wounds. We have been hurt enough. Act

ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க… ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து ஜிவி. பிரகாஷ்

ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க… ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகமெங்கும் நடந்து வருகிறது.

சேலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 16 வயது மாணவன் லோகேஷ் காலமானார்.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் அவர்கள் லோகேஷின் படத்தை பதிவிட்டு கூறியுள்ளதாவது….

G.V.Prakash Kumar ‏@gvprakash
தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீங்க . வன்முறை சாலை மறியல் எதுவும் வேண்டாம் . அமைதி போராட்டம் உங்கள் குடும்பம் பற்றி நினைத்துப்பாருங்கள்

Please dont do violence in Jallikattu protest says GV Prakash

lokesh jallikattu

ரஜினி-கமலை இயக்கிய ஷங்கரின் நிஜ ஹீரோக்கள் ‘இவர்கள்தான்’

ரஜினி-கமலை இயக்கிய ஷங்கரின் நிஜ ஹீரோக்கள் ‘இவர்கள்தான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shankarஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இருந்தபோதிலும் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் மெரினா பீச்சுக்கு சென்றுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்க சென்றேன்.

இதுபோன்ற எழுச்சியை ஒழுங்கை நான் பார்த்தது இல்லை.

இந்த ஒற்றுமை நிறைய மாற்றத்திற்கு தேவை.

நிஜ ஹீரோக்களை தலை வணங்குகிறேன் என ட்விட்டரில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

Shankar Shanmugham ‏@shankarshanmugh 13m13 minutes ago
I am at marina supporting #jallikattu what a spirit! what a discipline! we need this unity for lot of changes salute to the real heros

More Articles
Follows