கமல்-சூர்யா வழியில் பிரசன்னா-விஷால்-வரலட்சுமி..

கமல்-சூர்யா வழியில் பிரசன்னா-விஷால்-வரலட்சுமி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalaxmiடிவி நிகழ்ச்சிகளில் கலக்கிய சந்தானம், சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர், லொள்ளு சபா சாமி நாதன், லொள்ளு சபா மனோகர் இவர்கள் எல்லாம் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சினிமாவில் மட்டுமே இதுவரை தலை காட்டிய நட்சத்திரங்கள் சில நட்சத்திங்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார், சூர்யா உள்ளிட்டவர்கள் கோடீஸ்வர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

தற்போது முன்னணி நடிகரான கமல்ஹாசனும் பிக்பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் வழியில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் ஒருவர் நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர்கள் வரிசையில் நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார். ஜெயா டிவி.யில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

அதுபோல் சன் லைப் சேனலில் நடிகர் பிரசன்னாவும் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.

*பேட்ட* படத்தில் தெறி வில்லன்; மீண்டும் ரஜினி-மகேந்திரன் கூட்டணி!

*பேட்ட* படத்தில் தெறி வில்லன்; மீண்டும் ரஜினி-மகேந்திரன் கூட்டணி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini mahendranசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இப்படத்தில் கோலிவுட்டின் பிரபல நட்சத்திங்கள் பலரும் நடிக்கின்றனர்.

விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் ரஜினியை வைத்து சில படங்களை இயக்கியவரும் தெறி படத்தின் வில்லனுமான மகேந்திரனும் இணைந்துள்ளார்.

படம் முடிவதற்குள் இன்னும் எத்தனை நட்சத்திரங்கள் இணைய போகிறார்களோ? தெரியவில்லை.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ரஜினியின் ஆரம்ப கால படங்களான ஜானி, முள்ளும் மலரும் படங்களில் ரஜினியின் நடிப்புத் திறமையை கொண்டு வந்தவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Mahendran teams up with Rajinikanth in Petta

ராம்குமாரின் ராட்சசனை கொண்டாடும் கோலிவுட்

ராம்குமாரின் ராட்சசனை கொண்டாடும் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ratsasan posterஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள்.

நாயகன் விஷ்ணு விஷால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

நல்ல கதைகளையே தயாரிப்பவர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு. இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். நிறைய புதிய பட வாய்ப்புகள் அவரை நோக்கி வந்த வண்ணம் உள்ளது.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வினியோகிக்கும் திறமையாளர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சிறப்பான இசையால் மரியாதை செலுத்துகிறார்.

பார்வையாளர்கள் திரைப்படத்தை பார்ப்பதில் மட்டுமல்லாமல், அதை பற்றி வெளியில் சிலாகித்து பேசுவதில் பெருமை அடைந்து வருகிறார்கள். ராம்குமார் இயக்கத்தில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லி பாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மண்ட் ஆர்.ஸ்ரீதர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் படம் மக்கள் மத்தியில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாவதாக, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பாராட்டு மழையை தொடர்ந்து, தமிழ் சினிமா பிரபலங்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் மிகச் சிறப்பான திரில்லர் திரைப்படம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

படம் பற்றி கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

நடிகர் தனுஷ் – “ராட்ச்சன்! வாவ்! மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர். புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான மேக்கிங். பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை. சீட்டிம் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர். நான் படத்திற்குள் மூழ்கி விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குனர் வெங்கட் பிரபு – “ராட்சசன் தமிழ் சினிமாவில் சிறந்த சைக்கலாஜிக்கல் திரில்லர்களில் ஒன்று. சினிமா காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால், அமலா பால், ஜிப்ரான், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ராட்சசனின் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தின் தீவிரத்தை நான் விரும்பினேன்.

தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் – “மிகவும் தீவிரமான படம், படத்தின் பல எதிர்பாராத திருப்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் என்று கூறலாம். விஷ்ணு விஷால் எப்போதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ராம்குமார் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஜிப்ரான் இசை மிகப்பெரிய பலம்.

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் (அதே கண்கள்) – ராட்சசன் படத்தின் ஜானருக்கு உண்மையாக இருக்கிறது. ராம்குமார் அற்புதமாக எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை கொடுத்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சவுண்ட் சின்க் சினிமா, ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் எடிட்டர் ஷான் லோகேஷ் ஆகியோர் அபாரமாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இயக்குனர் சக்திவேல் – “பிரில்லியண்ட்! 2018ல் அனைத்து மொழிகளிலும் வெளியான திரில்லர் படங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த த்ரில்லர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் இருந்து ஒரு தரமான படைப்பு. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமாருக்கு என் பாராட்டுக்கள். இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு பாடம்.

இயக்குனர் கார்த்திக் ராஜு – “இயக்குனர் ராம்குமாரின் மிகவும் பலமான திரைக்கதைக்கு மீது வாவ்! விஷ்ணு விஷால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமலா பால் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் பெரும் பணியை செய்துள்ளனர்.

இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக மிக தரமாக உள்ளது. ஜிப்ரான் இசை மேலும் மதிப்பை கூட்டியிருக்கிறது. இது ஒரு நிச்சயிக்கப்பய் பிளாக்பஸ்டர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குனர் ஃபெரோஸ் – “ராட்சசன் சிறப்பாக உருவாக்கப்பட்ட, இருக்கை நுனிக்கு வர வைக்கும் ஒரு திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. விஷ்ணு விஷால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமாரின் முழு முயற்சியும் படத்தில் தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.

இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா – இயக்குனர் ராம்குமார் குழுவில் இருந்து ஒரு சிறந்த திரில்லர் படம். அனைத்து துறைகளும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இது தீவிரமான திரைப்படம். திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் – “விஷ்ணு விஷால் உங்கள் கேரியரில் சிறந்த ஒரு படம். தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் ராம்குமார் ஒரு அசாதாரண சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார்.

அமலா பால் மற்றும் மற்ற நடிகர்களும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசை படம் முழுக்க மிரட்டுகிறது. இந்த நல்ல படத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இயக்குனர் சீனு ராமசாமி – “இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரில்லர் படம். விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.

நடிகர் கருணாகரன் – “ராட்சசனின் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. விஷ்ணு விஷால் மற்றும் ராம்! திகிலை ஏற்படுத்தும் இந்த திரில்லர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இயக்குனர் கௌரவ் நாராயணன் – “சீட்டின் நுனிக்கு வரவைத்த இந்த அர்த்தமுள்ள சைக்கோ த்ரில்லர் படத்தை முழுமையாக ரசித்தேன். விஷ்ணு விஷால் நடிப்பும், அவரது உடல் மொழியும் நன்றாக இருக்கிறது.

அமலா பால் இயற்கையான மற்றும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜிப்ரானின் இசை உச்சம். கேமரா மற்றும் எடிட்டிங் சிறப்பு. இயக்குனர் ராம்குமார் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

ராணா டக்குபதி – “வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்! ‘ராட்சசன்’ படத்தை பற்றி நல்ல நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். விரைவில் படத்தை பார்க்கிறேன்.

Kollywood Celebrities praises Ratsasan aka Ratchasan movie

*மனுசங்கடா* படத்தில் மனித உரிமைக்குரல் எழுப்ப வரும் தேசிய விருது பெற்ற டைரக்டர்

*மனுசங்கடா* படத்தில் மனித உரிமைக்குரல் எழுப்ப வரும் தேசிய விருது பெற்ற டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manusangada participated in last year International Film Festival of India held in Goaபல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மனுசங்கடா’.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார்.

மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில் சென்ற ஆண்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இது.

புகழ்ப்பெற்ற கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை,ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: பி.எஸ்.தரன், இசை: அரவிந்த் – சங்கர். பாடல்: இன்குலாப். படத்தொகுப்பு: தனசேகர்.

தயாரிப்பு: தாரா, கண. நட்குணன்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போன்றே பல பரபரப்பான உண்மைச் சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

Manusangada participated in last year International Film Festival of India held in Goa

Manusangada participated in last year International Film Festival of India held in Goa

*பரியேறும் பெருமாள்* வரிசையில் சாதியை கொல்ல வரும் ஜிவி. பிரகாஷ்

*பரியேறும் பெருமாள்* வரிசையில் சாதியை கொல்ல வரும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarvam Thaala Mayam movie will deal with Caste issue In Music Societyமின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.

இவர் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.

தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அண்மையில் வெளியான பரியேறும் பெருமாள் படமும் சாதி பிரிவினையை சொன்ன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வரிசையில் சர்வம் தாள மயம் படமும் மக்களால் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம்.

Sarvam Thaala Mayam movie will deal with Caste issue In Music Society

சர்கார் சீக்ரெட் லீக்ஸ்; படக்குழுவினரை எச்சரித்த ஏஆர். முருகதாஸ்

சர்கார் சீக்ரெட் லீக்ஸ்; படக்குழுவினரை எச்சரித்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss warning Sarkar team should give any interview regarding movieசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் சர்கார் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள சில நடிகர்கள், சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

இந்த செய்தியை அறிந்த முருகதாஸ் படக்குழுவினருக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அன்பார்ந்த சர்கார் படக்குழுவினரே, இந்தப் படம் உருவாக பலர் கடுமையாக உழைத்துள்ளனர்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலர் படம் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்ந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

AR Murugadoss warning Sarkar team should give any interview regarding movie

More Articles
Follows