விக்ரம் பிரபு- நிக்கி கல்ராணி-பிந்து மாதவி இணையும் பக்கா

Pakka Movie imagesஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “
விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க. கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

S.S.சூர்யா என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம்.

ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள்) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று திருவிழாவில் ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை…
...Read More
‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனை’ ஆகிய…
...Read More
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள…
...Read More

Latest Post