விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குநர்

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்க நயன்தாரா & சமந்தா நாயகிகளாக நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’, கமலின் ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

மேலும் இவரது நடிப்பில் Merry Christmas, மும்பைக்கார் (ஹிந்தி படங்கள்) ஆகிய படங்களும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

முதன்முறையாக விக்ரம் – விஜய்சேதுபதி படங்களை இயக்கும் ரஜினி – விஜய் பட டைரக்டர்

இத்துடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம், ‘விடுதலை’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பல படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.

இந்த நிலையில் ‘ஹே சினாமிகா’ பட இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான படம் தான் ‘ஹே சினாமிகா’.

ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Vijay Sethupathi’s next with this female director

குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு வாய் காது இருக்காது..; அவர்கள்தான் மோடியை விமர்சிப்பார்கள் – பாக்யராஜ்

குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு வாய் காது இருக்காது..; அவர்கள்தான் மோடியை விமர்சிப்பார்கள் – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022′ என புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட்டார்

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பாக்யராஜ் பேசியதாவது..

“தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. தகுதியுள்ளவரை தான் பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

பாரத பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேருக்கு இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என தெரியாது.

இந்தியாவுக்கு இதுபோல எனர்ஜியான பிரதமர் தான் தேவை.

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்.

குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

Actor-director Bhagyaraj’s comment praising Modi slammed on internet

நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை பெயர் இதுதானா.? க்யூட்டா இருக்குல்ல

நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை பெயர் இதுதானா.? க்யூட்டா இருக்குல்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தில் பரத் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால்.

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து இருந்தார்.

பின்னர் துல்கர் உடன் ஹே சினாமிகா படத்திலும் நடித்து இருந்தார்.

கொரோனா லாக் டவுன் நேரத்தில் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார் காஜல்.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஓரிரு மினங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்களின் குழந்தைக்கு ‘நெய்ல்’ என பெயரிட்டுள்ளனர்.

குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என அழைக்கவுள்ளனர்.

Kajal Aggarwal revealed her baby boy name

மீண்டும் விஜய்சேதுபதி் படத்தில் போலீஸாக இணைந்த ராதிகா

மீண்டும் விஜய்சேதுபதி் படத்தில் போலீஸாக இணைந்த ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீராம் ராகவன்.

இவர் அந்ததூண், ஏஜெண்ட் வினோத் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

‘அந்தாதூன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெற்ற நிலையில் தற்போது தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணையும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீராம் ராகவன்.

(ஏற்கனவே ‘மும்பைகார்’ என்ற பாலிவுட் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.)

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

‘மேரி கிறிஸ்துமஸ்’ படம் தமிழில் வெளியாகி ஹிட்டான ‘மாநகரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அதில் முனீஸ்காந்த் நடித்த கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராதிகா படப்பிடிப்பு தளத்தில் கேத்ரினா உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில், “ஒரு வாரமாக காத்ரினா கைஃப்போடு பணிபுரிந்தேன். உன்னதமான நபர்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நாயகனின் அம்மாவாக போலீஸ் கேரக்டரில் ராதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Radika joins the sets of Merry Christmas

ஜெய் படத்திற்காக ரூ 1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட்

ஜெய் படத்திற்காக ரூ 1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட்டில், மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்…

சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது.

ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார்.

படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது.

இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு- ஜானி லால் / செவிலோராஜா D. F. Tech, படத்தொகுப்பு – ஆண்டனி, இசை – விஷால் பீட்டர், கலை இயக்கம் – N.M.மகேஷ், Vfx மேற்பார்வையாளர் – பிரபாகர், ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம், நடனம் – ராதிகா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Rs 1 crore-worth flight set put up for Jai’s superhero film

‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.

இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது.

இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் பிரத்யேக முத்திரை அவரது எழுத்திலும், இயக்கத்திலும் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தின் தரம் முதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது.

அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான டீஸர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளாவிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

இந்தப்படம் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

நடிகர்கள்
நானி
நஸ்ரியா
பகத் ஃபாசில்
நதியா
ஹர்ஷவர்தன்
ராகுல் ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு
எழுத்து & இயக்கம். : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி & ரவிசங்கர். ஒய்.
தயாரிப்பு நிறுவனம் : மைத்திரி மூவி மேக்கர்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி
இசை : விவேக் சாகர்
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
படத்தொகுப்பு : ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு : லதா நாயுடு
விளம்பர வடிவமைப்பு : அணில் & பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped

More Articles
Follows