மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன் வேடம் குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

விஜய் சேதுபதி

காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இவையில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வில் இவர் கையெழுத்திட்டு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலைஞர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கையெழுத்திட்டார்.

விஜய் சேதுபதி

Vijay Sethupathi signs for No To Drugs

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் அப்டேட்…

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி, ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நேற்று, பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது

இந்த நிலையில், ‘வாத்தி’ படம் தமிழகத்தில் மட்டும் ரூ 8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது.

மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் மொத்தம் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வார இறுதியில் மேலும் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Vaathi Box Office First Day Collection Update

முதல் படத்திலேயே முத்திரை.; பருத்திவீரனை கொண்டாடும் பரவசத்தில் கார்த்தி ரசிகர்கள்

முதல் படத்திலேயே முத்திரை.; பருத்திவீரனை கொண்டாடும் பரவசத்தில் கார்த்தி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் கார்த்தி.

அதன் பின்னர் அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

தன் முதல் படத்திலேயே நடிப்பு முத்திரையை பதித்தவர் கார்த்தி என்று சொன்னால் அது மிகையல்ல.

பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் முதல் படத்தில் நடிப்பு முத்திரையை பதிப்பதில்லை. ஆனால் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் தன் நடிப்பால் அசத்தியிருந்தார்.

அந்த வரிசையில் கார்த்தியும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை – பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு சிறப்பு காட்சியை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர் கார்த்தி ரசிகர்கள்.

பருத்திவீரன்

Karthi fans Celebrates Paruthi Veeran 16 Years

சாதி இடஒதுக்கீடு ஏன்.? சர்ச்சையாகும் என தெரிந்தே கருத்து சொன்ன ‘வாத்தி’ இயக்குனர்

சாதி இடஒதுக்கீடு ஏன்.? சர்ச்சையாகும் என தெரிந்தே கருத்து சொன்ன ‘வாத்தி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் உருவான ‘வாத்தி’ என்ற படத்தை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி.

இந்த படம் நேற்று ஒரே நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் கல்வியின் அவசியத்தையும் கல்வியில் திணிக்கப்படும் அரசியல் பிரச்சினைகளையும் பேசி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கி.

அவரிடம் ‘‘ஒருவேளை நீங்கள் மத்திய கல்வி் அமைச்சரானால் உங்களின் பிரதான முடிவு என்னவாக இருக்கும்?” என கேட்கப்பட்டது.

“என் பதில் சர்ச்சையாக இருக்கலாம். ஆனால், தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அறிவிப்பேன்.

இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாகத்தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, சாதி ரீதியாக கொடுக்கக் கூடாது” என பேசி இருக்கிறார்.

அவர் சொன்னதுபோலவே இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vaathi Sir director Venky Atluri controversial speech

சிவாவின் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

சிவாவின் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடித்திற்கும் படம் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க, அஞ்சு குரியன், மனோ, எம்கேபி ஆனந்த், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில், திரைப்பட தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 16 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

‘ஒற்றை சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

மேலும், சிவா ‘காசேதான் கடவுளடா’, ‘சுமோ’, ‘சலூன்’ மற்றும் ‘கோல்மால்’ உள்ளிட்ட சில திட்டங்களையும் அவர் கையில் எடுத்துள்ளார்.

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

‘Single Shankarum Smartphone Simranum’ to release on February 24

வட இந்திய அரசியல்வாதியை திருமணம் செய்த தனுஷ் பட ஹீரோயின்

வட இந்திய அரசியல்வாதியை திருமணம் செய்த தனுஷ் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ஹிந்தி படம் ‘ராஞ்சனா’. இதில் 2வது நாயகியாக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர்.

ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்த படம் 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது.

நடிகர் ஸ்வரா பாஸ்கர் பல சர்ச்சையான கருத்தைகளை பேசி வட இந்தியா மீடியாக்களில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்.

இந்த நிலையில் அவர் தனது நீண்ட கால தோழரான காதலரான பகத் அகமது என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் வட இந்தியாவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது கூடுதல் தகவல்..

Dhanush movie heroine Swara Baskar got married

More Articles
Follows