மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi fans*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது
202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.
இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள்.

வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016இல் 185 பெயரே அதிகமானது
மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் எண்ணிக்கை 1338

இன்று ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தினர்

தர்பார் சிறப்பு காட்சி ரத்து; விஜய் ரசிகர்கள் மீது கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தர்பார் சிறப்பு காட்சி ரத்து; விஜய் ரசிகர்கள் மீது கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar special shows cancelled Rajini fans condemned Vijay fansரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவில் சாதனை படைக்கும் எனத் தெரிகிறது. சில தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டன.

அதிகாலை காட்சிகளின் டிக்கெட்டு முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டதில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும் இனி எந்த நடிகரின் பட சிறப்பு காட்சிக்கும் கிருஷ்ணகிரியில் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்த பிகில் பட ரிலீசின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காட்சிகள் திரையிட கால தாமதம் ஆனது.

அப்போது ஆர்வக் கோளாறில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த ரகளை சம்பவத்தின் எதிரொலியாகவே தர்பார் பட சிறப்பு காட்சிக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம். அவர்கள் செய்த தவறுக்கு எங்களுக்கு ஏன் காட்சிகள் மறுக்கப்படுகிறது.

நாங்களும் அவர்களும் ஒன்றா? என இணையத்தளங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Darbar special shows cancelled Rajini fans condemned Vijay fans

பால் தாக்கரேவாக சாருஹாசன்..; விஜய்ஸ்ரீ வெளியிட்ட அதிரடி போஸ்டர்

பால் தாக்கரேவாக சாருஹாசன்..; விஜய்ஸ்ரீ வெளியிட்ட அதிரடி போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sri reveals Bal Thackeray look of Charuhassan in Dhadha 902019ல் ரஜினியின் காலா படத்திற்கு இணையாக ‘தாதா 87’ போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இதில் 87 வயது தாதாவாக நடித்திருந்தார் சாருஹாசன்.

அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருதை சாருஹாசன் பெற பெரும் பங்காற்றியவர் விஜய் ஸ்ரீ.

இந்த நிலையில் இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சாருஹாசன்.

இதனை முன்னிட்டு இயக்குனரான விஜய்ஸ்ரீ ஜி, தனது அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சாருஹாசனை வைத்து ‘தாதா 90’ என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் வட இந்தியாவில் இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான பால் தாக்கரே’ கேரக்டரில் நடிக்கிறாராம் சாருஹாசன்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் பப்ஜி படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Vijay Sri reveals Bal Thackeray look of Charuhassan in Dhadha 90

‘ஒத்த செருப்பு’ ரீமேக்; பேட்ட வில்லனுடன் இணையும் பார்த்திபன்

‘ஒத்த செருப்பு’ ரீமேக்; பேட்ட வில்லனுடன் இணையும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta villain Nawazuddin Siddiqui in Oththa Seruppu remakeகோலிவுட்டில் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் இயக்குனர் பார்த்திபன்.

அண்மைக்காலமாக நடிப்பை மட்டும் தொடர்ந்து வந்த இவர் அண்மையில் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி தான் ஒருவர் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தென்னிந்தியளவில் பலரின் பாராட்டைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதுகுறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளதாவது..

“ஒத்த செருப்பு படத்தை இந்தியில் நவாசுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று
வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Petta villain Nawazuddin Siddiqui in Oththa Seruppu remake

தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாடி ரகசியம் என்ன?

தர்பாரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தாடி ரகசியம் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Rajini have beard look in Darbar movie Police roleமுருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் போலீஸ் கமிஷ்னர் வேடத்தில் நடித்துள்ளார் ரஜினி.

இதற்கு முன்பு அலெக்ஸ் பாண்டியன், கொடி பறக்குது, பாண்டியன் உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்திருந்தார். இவை அனைத்திலும் போலீஸ் கேரக்டர் சிறியளவிலேயே இருந்தது.

தற்போது முதன்முறையாக முழு நீள போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதுவும் தாடி வைத்துள்ளார்.

பொதுவாக போலீஸ்காரர்கள் தாடி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் ரஜினி தாடி வைத்திருப்பதன் காரணம் குறித்து முருகதாஸ் தன் அண்மை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உடலில் ஏதாவது அலர்ஜி தொடர்பான பிரச்சினை இருந்தால் தாடி வைத்துள்ள கொள்ள அனுமதி உண்டாம். அதுபோல் மத ரீதியாக அதாவது சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தால், சீக்கிய மதம், சிங் மதம் உள்ளிட்ட நபர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.

இதுபோல் தாடிக்கான ரகசியத்தை வைத்திருக்கிறாராம். படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அன்றைக்கு தெரிந்துவிடும் தானே.. காத்திருப்போம்.

Why Rajini have beard look in Darbar movie Police role

கதை திருட்டு சர்ச்சை.; பாக்யராஜ் & முருகதாஸ் மறைமுக தாக்குதல்

கதை திருட்டு சர்ச்சை.; பாக்யராஜ் & முருகதாஸ் மறைமுக தாக்குதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Bhagyaraj and Murugadoss recent talk on Story theft moviesகோலிவுட்டில் கதை திருட்டு சர்ச்சைகள் சமீபத்தில் அதிகமாக அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் முருகதாஸ் இயக்கிய சர்கார் பட விவகாரம் கதை திருட்டு சர்ச்சையால் பெரிதாக பேசப்பட்டது. இதில் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தலையிட்டு கதை திருடப்பட்டது என அறிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ்… அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என சுட்டு கதை பண்ணுபவர்கள் ஒருநாளும் தேறமாட்டார்கள். அவர்களால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று பேசியிருந்தார்.

தற்போது இதற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் என முருகதாஸ் என தெரிகிறது.

அவரின் பேட்டியில்… ஒரு பாட்டிலை பற்றி கதை எழுதியிருந்தால், மூடியை வைத்து நான் கதை பண்ணியிருக்கிறேன். அதனால் பாட்டிலுக்கும் மூடிக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.

இப்படி எல்லாரும் எதிர்க்க புறப்பட்டால் யாருமே கதை பண்ண முடியாது என தெரிவித்துள்ளார் தர்பார் டைரக்டர்.

நல்லவேளை தர்பார் படத்திற்கு கதை திருட்டு பிரச்சினை இதுவரை இல்லை.

Directors Bhagyaraj and Murugadoss recent talk on Story theft movies

More Articles
Follows