தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா புதிய படம் ஒன்றை இயக்கி, தயாரித்து வருகிறார்.
இதில் விஜய்சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு அநீதிக் கதைகள் என்ற தலைப்பை உறுதிசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நடிக்கும் பல முக்கிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டார்களாம்.
ஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதை அவர்கள் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.