விஜய்சேதுபதியுடன் சமந்தாவுக்கு முதன்முறை; காயத்ரிக்கு 6வது முறை

விஜய்சேதுபதியுடன் சமந்தாவுக்கு முதன்முறை; காயத்ரிக்கு 6வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi samantha gayathrie‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து அநீதிக் கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்களாம்.

இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க காயத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் 5 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் சமந்தா நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

Gayathiri teams up with Vijay Sethupathi for sixth time in Aneethi Kathaigal

2வது முறையாக மோதும் விஜய்-கார்த்தி; அதே மேஜிக் நடக்குமா.?

2வது முறையாக மோதும் விஜய்-கார்த்தி; அதே மேஜிக் நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal and Theeran Adhigaram Ondru clash on Diwali 2017அட்லி இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகிறது.

இதே நாளில் இந்த படத்துடன் 3 படங்கள் வெளியாகும் என இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

1) கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம்
2) சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம்
3) அர்ஜீன் இயக்கி தயாரித்து அவரது மகள் நடித்துள்ள சொல்லிவிடவா

இந்நிலையில் இதே நாளில் சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்கி, கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய்யின் காவலன் மற்றும் கார்த்தியின் சிறுத்தை படங்கள் வெளியானது.

இவை இரண்டும் வெற்றிப்பெற்றது. அதே போன்ற வெற்றி மேஜிக் இந்தாண்டும் நடந்தால் சந்தோஷம்தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mersal and Theeran Adhigaram Ondru clash on Diwali 2017

விவேகம் கதையை திருடியவர் மன்னிப்பு கேட்கனும்; அஜித்துக்காக பார்க்கிறேன்… – ரவீந்திரன் சந்திரசேகரன்

விவேகம் கதையை திருடியவர் மன்னிப்பு கேட்கனும்; அஜித்துக்காக பார்க்கிறேன்… – ரவீந்திரன் சந்திரசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Vivegam story theft Producer Ravindran Chandrasekar complaintசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் ‘விவேகம்’ கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

என் படம் ’ஐ-நா’-வின் அடிப்படைக் கதையே ’விவேகம்’ படத்தின் கதை. என் படம் 2013ல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.

அவரிடம் ஒரு கதை வடிவமும் தந்தேன். அஜித் குமாரை சந்திக்க வைக்கிறேன் என 3 வாரம் எடுத்துக் கொண்டார். பின்னர் வந்து அஜித் புதுமுக இயக்குநருடன் கதையில் நடிக்க மாட்டார் என சொல்லிவிட்டார்.

நான் ’விவேகம்’ படம் பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையில் சில ஒற்றுமைகள் இருந்தன. இதற்கும், இயக்குநர் சிவா மற்றும் அஜித்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது நான் உறுதியாகக் கூறுகிறேன்.

ஏனென்றால் அவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. எனவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பரே. அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டார்.

படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.

நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே 1.5 வருடங்கள் ஆகும்.

இந்தக் கதையை பல பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு இந்த அறிவுத் திருட்டைப் பற்றி கேட்டார்கள்.

ஒரு இயக்குநர், உதவி இயக்குநரின் சிந்தனை திருடப்படும்போது எப்படி வலிக்கும் என இப்போது புரிகிறது. இந்தத் துறையில் இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் போராடுபவர்களுக்கு என் வணக்கங்கள்

ஒரு தயாரிப்பாளராக இருந்து 3 படங்கள் எடுத்த பின்பும் நான் துரோகத்தை சந்தித்துள்ளேன். இதுவே வேறு யாராவதாக இருந்தால் அவர் எப்படி கஷ்டப்படுவார்?

இதை நான் இப்போது சொல்வது எந்த வித மலிவான விளம்பரத்துக்கும் கிடையாது. அல்லது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.

ஒரு எளிய மன்னிப்பு கேட்டால் போதும். பொதுவில் கூட சொல்ல வேண்டாம். தல உடன் இருக்கும்போது தவறுகள் நடக்கக்கூடாது என்பது புரிய வேண்டும். நானும் தல ரசிகன் என்பதால்தான் அவருக்கேற்றார் போல கதை எழுதினேன்.

விவேகத்தின் தரத்தைப் பற்றி நான் பேசவரவில்லை. படம் அற்புதமாக இருக்கிறது. எனது ‘ஐ-நா’ படத்தின் ஷூட்டிங் 2018ஆம் ஆண்டு தொடங்கும்.

சம்பந்தப்பட்ட நபர் என்னை சீக்கிரம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டால் நல்லது.

இல்லையேல் தேவையான ஆதாரங்களுடன் பொதுவில் சொல்லுவேன். அஜித்குமார் என்ற மனிதரை நான் மதிப்பதால் இன்னும் பொறுமையாக இருக்கிறேன்.

எதிர்காலத்திலும் இது போன்ற பிரச்சினையை யாரும் சந்திக்கக் கூடாது. எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே என அழக்கூடாது.

நான் சொல்வதில் நியாயம் இருக்கும் என நினைப்பவர்கள் எனக்கு நீதி கிடைக்க ஆதரவும் கொடுங்கள். உங்களைப் போல கனவுகள் இருக்கும் ஒருவன் நான். தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குநராகவும் கனவு வைத்திருப்பவன்.
NEVER EVER GIVE UP.

இவ்வாறு ரவீந்திரன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இவருடைய ஃபேஸ்புக் பதிவுக்கு ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘விவேகம்’ படத்தின் கதை தனது என்று ஒருவர் அர்த்தமில்லாத பதிவு ஒன்றை போட்டிருந்தார். அவர் என் நண்பர் தான். ஆனால் அவருக்கு ஒன்று விளம்பரம் தேவைப்படுகிறது அல்லது அவர் சிறுபிள்ளைத்தனமானவர் என நினைக்கிறேன்.

என் தொடர்பை ப்ளாக் செய்துவிட்டார். மற்ற நாயகர்களின் ரசிகர்களும் வேறு பலரும், ஒருவருக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று அந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர். இதை ஆதரிக்காதீர்கள்.

ஏனென்றால், இந்த மாதிரியான ஆட்களால், நாளையே வேறொருவர் இது போன்ற பிரச்சினையில் மாட்டி அவரிடம் ஆதாரம் இருந்தாலும் அவரை நாம் புறக்கணித்துவிடுவோம்.

யோசித்து, ஆதரவு கொடுங்கள். கொஞ்சம் முதிர்ச்சியாக நடந்து கொள்வோம்.

இவ்வாறு சினிஷ் தெரிவித்துள்ளார்.

Ajiths Vivegam story theft Producer Ravindran Chandrasekar complaint

விஷால் அரசியலுக்கு வந்தால் ரொம்ப சந்தோஷம்… டிடிவி தினகரன்

விஷால் அரசியலுக்கு வந்தால் ரொம்ப சந்தோஷம்… டிடிவி தினகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal ttv dinakaranதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாக்கும் க்ரிதிஷ்க்கும் கடந்த 27ம் தேதி திருமணம் சென்னையில் நடைபெற்றது.

இந்த திருமணம் மற்றும் அன்று மாலையே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், ரஜினி, சிவகுமார், விஜய், கார்த்தி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுமண தம்பதியருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

அதற்கு விஷாலும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று விஷால் மற்றும் புதுமண தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன்பின் பேசிய டிடிவி தினகரன், ‘விஷாலுக்கு தலைமைப் பண்பு உள்ளது. சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்று தெரிவித்தார்.

I will be happy if actor Vishal enters into politics says TTV Dhinakaran

vishal ttv dhinakaran

விஜய் மட்டும் செய்யலாம்; மெர்சலை யாரும் காப்பியடிக்கக் கூடாதா.?

விஜய் மட்டும் செய்யலாம்; மெர்சலை யாரும் காப்பியடிக்கக் கூடாதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and his Mersal trademark issueவிஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக இப்படத்திற்கு டிரேட் மார்க்கை பெற்றுள்ளனர் என்பதை பார்த்தோம்.

இதன் மூலம் இப்பட தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் விதி.

இது திரையுலகில் மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எம்ஜிஆர் மற்றும் ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களை இன்றைய படங்களுக்கு படத்தலைப்பாக வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதுபோல் சில வருடங்களுக்கு பின்னர் விஜய்யின் படத்தலைப்பை புதுமுக நடிகர்கள்/இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளது.

இதுபோல் டிரேட்மார்க் வாங்குவதால் அதை செய்ய முடியாது.

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான வேட்டைக்காரன் படத்தலைப்பை விஜய் தன் படத்திற்கு வைத்திருந்தார்.

எனவே, விஜய் மட்டும் காப்பியடிக்கலாம். மற்றவர்கள் அவர் படத்தலைப்பு பயன்படுத்தக்கூடாதா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

Vijay and his Mersal trademark issue

கிரிக்கெட்+நடிப்பு தெரிந்தவரா நீங்கள்.? அருண்ராஜா காமராஜை அனுகவும்

கிரிக்கெட்+நடிப்பு தெரிந்தவரா நீங்கள்.? அருண்ராஜா காமராஜை அனுகவும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting call for girls who know Cricket and Actingபல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார்.

தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், ” நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான்.

இயக்குனராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் எனக்கு மேலும் உதவியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கம் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக இப்போது உணர்கிறேன்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன்.

சமீபத்தில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து கொண்டாட வைத்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பே இக்கதையை தயார் செய்துவிட்டேன்.

கனவுகளுக்காக போராடுவதும், அதற்கு குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்றும், ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். நெகிழவைக்கும் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன்.
கிரிக்கெட்டும் ஆட தெரிந்த நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளோன்.

இதுவரை வெளிவராத பல அறிய திறமைசாலிகளை இந்த ஆடிஷன் மூலமாக வெளிகொண்டுவந்து இப்படத்தை மெருகேத்த உள்ளோம். எனது இந்த இயக்குனர் படலத்தை மிகவும் உற்சாகத்திடம் எதிர்நோக்கியுள்ளேன்” எனக்கூறினார் அருண்ராஜா காமராஜ்.

விருப்பமுள்ளோர் தங்களது விவரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : [email protected]

Casting call for girls who know Cricket and Acting

More Articles
Follows