அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி

அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ” ராஜ வம்சம் ” .இது T. D ராஜாவின் மூன்றாவது படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – ஜோகன்,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

வடசென்னை 2 வருமா..? வராதா? குழப்பத்தை தீர்த்துவைத்த தனுஷ்

வடசென்னை 2 வருமா..? வராதா? குழப்பத்தை தீர்த்துவைத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் அசுரன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து துரை செந்தில்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வடசென்னை 2 படம் இனி வராது என தகவல்கள் பறந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனுஷ் கூறியுள்ளதாவது…

“என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும்.

அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என தனுஷ் கூறியுள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினியை மிரட்ட இத்தனை வில்லன்களா..?

தர்பார் படத்தில் ரஜினியை மிரட்ட இத்தனை வில்லன்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)லைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

நயன்தாரா, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் 3 வில்லன்கள் நடிக்கிறார்களாம்.

இஷாக், பாஹி 2 ஆகிய ஹிந்தி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் இப்படத்தில் நடிக்கிறார்.

இவரின் தந்தை வேடத்தில் சுனில் ஷெட்ட நடிக்கிறார்.

இவர்களுடன் நவாப் ஷாவும் வில்லனாக நடித்து வருகிறாராம்.

டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்தவர் நவாப் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

1980 கால கட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “

1980 கால கட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா

இசை – சபு வர்கீஸ்

பாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்

எடிட்டிங் – ஜே.பி

நடனம் – நரேஷ் ஆனந்த்

ஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

இது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.

Big Breaking கமல்-ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி கன்பார்ம்

Big Breaking கமல்-ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and AR Rahman joins after 2 decades for Thalaivan Irukiraanஉலகநாயகன் கமல் நடித்த இந்தியன், தெனாலி ஆகிய படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைதிருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இணைந்து பணி புரியவில்லை.

இந்தியன் படத்தை ஷங்கர் இயக்க, தெனாலி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகவுள்ளது.

இப்படத்தை கமலே இயக்கி நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Kamal and AR Rahman joins after 2 decades for Thalaivan Irukiraan

அரைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார்.. – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார்.. – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Kadambur Raju slams Suriya and his speech about Education systemநடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் அகரம் பவுண்டேசன் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளித்து மகிழ்ந்தனர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.

நடிகர் சூர்யா பேசும் போது…

ஒரே ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.

சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்.

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்.

5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. என்று ஆவேசமாக பேசினார் சூர்யா.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடுமையாக சூர்யாவை சாடியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும். அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார். நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.” என கடம்பூர் ராஜூ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

TN Minister Kadambur Raju slams Suriya and his speech about Education system

More Articles
Follows