விஜய்ஆண்டனியை அரசியலுக்கு அழைக்கும் ‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன்

Vijay Antony and Anandha Krishan team up for Political movieவிஜய் ஆண்டனி நடிப்பில் `கொலைகாரன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த பட அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. இந்த படத்தை தயாரிக்கிறார் டி.டி.ராஜா.” எனத் தெரிவித்துள்ளார்.

இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு ( பெயரிப்படாத படம் )சசிகுமார் 19 ) பொள்ளாச்சியில் சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம்  T  D ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும்.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது. எமன் படத்திலும் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிபதிவினை N .S உதயகுமார் செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு – T D ராஜா – செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்
இசை – ஜோகன்
ஒளிப்பதிவு – N S உதயகுமார்
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது

Vijay Antony and Anandha Krishan team up for Political movie

Overall Rating : Not available

Latest Post