விஷால் அறிவிப்பால் தன் முடிவை மாற்றினாரா விஜய்..?

விஷால் அறிவிப்பால் தன் முடிவை மாற்றினாரா விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின்னர் சில நாட்களில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை விடுத்து இருந்தன.

அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.

அதன்படி எந்த படத்தின் அறிவிப்பும் வெளிவராது எனவும், சூட்டிங் நடைபெறாது எனவும் தெரிவித்து இருந்தன.

இதனால் திரையுலகமே ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

ஒரு வேளை திரையுலக போராட்டம் தொடரும் என்றால், அப்போது இதை வெளியிடுவது சரியாக இருக்காது, விஜய் 61 பட பர்ஸ்ட் லுக்கில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

எனவே மே மாதம் இறுதிக்குள் (மே 28ஆம் தேதி) பர்ஸ்ட் லுக் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Vijay 61 first look may be pre poned due to Cinema industry strike

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் தனுஷ்

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Soundarya Rajini combo VIP2 release date will be release date will be announced todayசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து கதை, வசனம் எழுதியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இதில் தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் தனுஷ்.

அன்றைய தினம் தனுஷின் பிறந்த நாள் என்பதால் இது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அளித்துள்ளதாம்.

சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 movie release will be on Dhanush Birthday special to his fans

‘பெண்களை மதிக்க அஜித்திடம் கற்க வேண்டும்’ – காயத்ரி ரகுராம்

‘பெண்களை மதிக்க அஜித்திடம் கற்க வேண்டும்’ – காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gayathri Raghuramபிரபல டான்ஸ் மாஸ்டரான காயத்ரி ரகுராம் நடிகையாகவும் படங்களில் நடித்து வருகிறார்.

நடன கலைஞர்களின் மையப்படுத்தி இவர் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தன் ரசிகர்களுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல அஜித் குணாதிசயம் பற்றி அவரது ரசிகர் கேட்டார்.

அதில் பதிலளிக்கும்போது….

“அஜித் ஒரு நல்லத மனிதர்.

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லாரும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால்

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohan lal and Peter heinதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

தமிழில் காக்க காக்க, அந்நியன், சிவாஜி, எந்திரன், 7ஆம் அறிவு, மகாதீரா, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

அண்மையில் மோகன்லால் நடித்து வெளியான புலி முருகன் படத்திற்காக சண்டை பயிற்சிக்கான தேசிய விருதை பெற்றார் இவர்.

இந்நிலையில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை இயக்க போகிறாராம்.

இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்யை கடவுளாக்கி மாலை போட்டு விரதமிருக்கும் ரசிகர்கள் (வீடியோ)

விஜய்யை கடவுளாக்கி மாலை போட்டு விரதமிருக்கும் ரசிகர்கள் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Vijay fans praying Vijay as Godஇந்திய சினிமாவுக்கு எப்படியான ரசிகர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் மிஞ்சிவிடுவார்கள் நம் தமிழக சினிமா ரசிகர்கள்.

நடிகர், நடிகைகளை கடவுளாக பாவித்து, அவர்களுக்கு கோயிலும் கட்டிய ரசிகர்கள் இங்கே உண்டு.

மறைந்த நடிகர்கள், வாழும் நடிகர்கள் ஆகியோரின் போட்டோக்களை வைத்து வணங்கும் வெறியான ரசிகர்கள் இன்றும் உண்டு.

இந்நிலையில் நடிகர் விஜய்யை கடவுளாக்கி அவரது சிலையை வணங்கி, மாலை போட்டு விரதமிருக்கிறார்கள் இளைய தளபதியின் ரசிகர்கள்.

மேலும் தீபாராதனை காட்டி, தளபதியே, விஜய்யே… கடவுளே… அன்பே… அழகே, அமுதே என போற்றி பாடிவருகின்றனர்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tamilnadu Vijay Fans Praying Vijay as God

அட நீங்களே பாருங்களேன்…

https://www.youtube.com/watch?v=W-ETzEb_6nk

ரஜினி-கமலை பார்த்தாச்சும் விஜய்-அஜித் செய்வார்களா?

ரஜினி-கமலை பார்த்தாச்சும் விஜய்-அஜித் செய்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raiini kamal ajith vijay karthiஅண்மைகாலமாக ரஜினி அந்த படத்தை பார்த்தார். இந்த படத்தை பாராட்டினார்.

கமல் இந்த பட டீசரை வெளியிட்டார். அந்தப் பட விழாவில் கலந்து கொண்டார் என்ற செய்திகளை அடிக்கடி பார்த்து இருப்போம்.

இது புதியவர்களையும் திறமையானவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் இதை நல்ல மனதுடன் செய்கின்றனர்.

இதனால் பெயரே தெரியாத படங்களுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்துவிடுகிறது.

இதனால் ரிலீஸின் போது அந்த படங்களின் வியாபாரமும் பெருகிறது.

ஆனால் ரஜினி-கமலை அடுத்து முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் இருவரும் இதுபோன்ற விஷயங்களில் ஈடுப்படுவதில்லை.

ரஜினி-கமலை பார்த்த பிறகாவது, விஜய்-அஜித் செய்வார்களா? என்பதே சிறு தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் அஜித் தன் பட பூஜை, பாடல் வெளியீட்டு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிக்கே வராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Ajith Vijay follows Rajini Kamal way to support low budget movies

More Articles
Follows