ஆட்டோவில் தல அஜித்..; வைரலாகும் வீடியோ (உள்ளே)

ஆட்டோவில் தல அஜித்..; வைரலாகும் வீடியோ (உள்ளே)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் செல்லும் ஆட்டோ அருகே சென்ற நபர் ஒருவர் இந்த வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் அஜித் சைக்கிளில் ரைட் செய்த புகைப்படங்கள் வைரலானது. சுமார் 30000 கிமீ் சைக்கிளில் அஜித் சென்றதாக தகவல்கள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video of Thala Ajith travelling in an auto goes viral

அகில் & இஷாரா நாயர் இணையும் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’

அகில் & இஷாரா நாயர் இணையும் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிலா ப்ரமோட்டர்ஸ் , TN75 K K கிரியேஷன்ஸ் , ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரிக்கும் படம் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா”.

இதில் கல்லூரி “அகில்” சதுரங்க வேட்டை “இஷாரா நாயர்” “யோகி பாபு” “மொட்டை ராஜேந்திரன்” “மனோபாலா” “சூப்பர் சுப்பராயன்” “கௌசல்யா” மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் சன் டிவி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் மார்ச் 26 முதல் உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.

கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று மன தொய்வடையும் போது தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவருடைய உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை..

ஒளிப்பதிவு “ரஹிம் பாபு”.

இசை “வர்ஷன்”, “ஜெய்டன்”. எடிட்டிங் “சுரேஷ் URS”.

சண்டைப்பயிற்சி “சூப்பர் சுப்பராயன்”. கலை “ஜான் பிரிட்டோ”. கவிஞர் “முகையூர் முத்து”, “சக்தி செல்லம்”, “வைரபாரதி”, “பாண்டி செல்லம்”.

பாடகர் “காகா பாலச்சந்தர்”, “மதுபாலகிருஷ்ணன்”, “கிருஷ்ணகுமார்”.

நிலா ப்ரமோட்டர்ஸ், TN75 KK கிரேஷன்ஸ், ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன் இவர்களுடன் இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வைஸ்லின் இணைந்து தயாரிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் கெவின்.

Akhil and Ishara Nair joins for Engada Iruthinga Ivvalavu Naala

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா டைட்டில் வின்னர்

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா டைட்டில் வின்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.. ‘ரஜினி முருகன்’ & ‘சீமராஜா’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம்.

தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இது மக்கள்செல்வனின் 46வது படமாக உருவாகவுள்ளது.

இந்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே போலீசாக விஜய்சேதுபதி நடித்த ’சேதுபதி’ படத்தின் சாயல் இல்லாமல், இந்த கேரக்டரில் காமெடி அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நாயகியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Miss India title winner joins VJS 46

anukreethy vas

பிக்பாஸ் கொடுத்த பணத்தில் ஹெலிகாப்டர் பயணம்..; கமல் ஓபன் டாக்

பிக்பாஸ் கொடுத்த பணத்தில் ஹெலிகாப்டர் பயணம்..; கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு தேர்தலில் போட்டியிடுகிறார்.

எனவே தேர்தல் நடத்தும் அலுவலரான உ.முருகேசனிடம் இன்று (மார்ச் 18) வேட்பு மனுத் தாக்கல் செய்தார் தங்கவேலு.

அப்போது கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடனிருந்தார்.

பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“40 ஆண்டுகள் தொடர்ந்து நற்பணி செய்து வருபவர் தங்கவேலு.

அவரின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும்.

திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது அரசியல் காரணமாக இருக்கலாம்

பேருந்தில் சென்று கொண்டிருந்தவன் நான். என்னை ஹெலிகாப்டரில் செல்ல வைத்ததே இந்த மக்கள்தான்.

நான் அரசுப் பணத்தில் செல்லவில்லை. சொந்தச் செலவில் பயணிக்கிறேன்.

இதற்காகதான் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

தேர்தல் பரப்புரைக்குச் செல்ல எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை.

ஆனால் நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்ல ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகிறேன்.

எங்களின் கட்சிக் கூட்டங்களுக்கு எளிதாக அனுமதி கிடைப்பதில்லை.

நான் மாணவர்களுடன் பேசிவிடக்கூடாது என்பதற்காக மறைமுகச் செய்தியை கல்லூரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

எனக்குப் பல இடங்களில் இடையூறு செய்கின்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிகூட இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தை அறிவித்துள்ளார்.”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Kamal Haasan about helicopter journey

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ரஜினியுடன் ‘பேட்ட’ மற்றும் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், மகேஷ் பாபு – மாளவிகா போட்டோக்களை வைத்து இந்த ஜோடி காம்பினேஷனை பார்க்க யாரெல்லாம் ஆசைப்படுறீங்க?? என கேட்டு இருந்தார்.

அதற்கு முதல் ஆளாக *நான்* என்று பதிலளித்து இருக்கிறார் மாளவிகா மோகனன்.

Master girl wants to act with super star

mahesh babu

தியாகராஜனின் ‘அந்தகன்’..; பிரசாந்த் – சிம்ரன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

தியாகராஜனின் ‘அந்தகன்’..; பிரசாந்த் – சிம்ரன் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் வென்றது.

மலையாளத்தில் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

டாப் ஸ்டார் பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்கவிருந்த நிலையில் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

தற்போது ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கவிருக்கிறார்.

தற்போது மேலும் ஒரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்திருக்கிறார்.

இவர் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

பிரசாந்த் & பிரியா ஆனந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தில் பணிபுரியவுள்ள மற்ற கலைஞர்கள் விவரம் இதோ…

பிரசாந்த்
சிம்ரன்
கார்த்திக்
பிரியா ஆனந்த்
யோகி பாபு
ஊர்வசி
கே.எஸ்.ரவிக்குமார்
மனோபாலா
வனிதா விஜயகுமார்
லீனா சாம்சன்
செம்மலர்
பூவையார்

மற்றும் பலர்

ஒளிப்பதிவு

ரவியாதவ் DFT

கலை: செந்தில் ராகவன்

உடைகள்
உத்ரா மேனன்

பத்திரிக்கை தொடர்பு
நிகில் முருகன்

Top kollywood actress joins Andhagan

Priya Anand in Andhagan

More Articles
Follows