6வது படிக்கும் போதே குறும்பட இயக்கம்.; 18 வயது இளைஞர் இயக்கிய படத்தை பார்த்து பாக்யராஜ் & ரவீந்தர் பாராட்டு

6வது படிக்கும் போதே குறும்பட இயக்கம்.; 18 வயது இளைஞர் இயக்கிய படத்தை பார்த்து பாக்யராஜ் & ரவீந்தர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’ என்ற 50- நிமிட-திரைப்படம் இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த படம் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்துகளைப் பகிர்ந்த பாக்யராஜ், “ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முதல் காட்சி மிகவும் முக்கியமானது, அதை இந்த இளம் குழு அற்புதமாக செய்துள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டும். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நண்பர்களையும் பாராட்டுகிறேன்.

தங்கள் மகனின் ஆர்வத்தை அடையாளம் காட்டியதற்கும், அவர் விரும்பிய பாதையில் தொடர ஊக்குவிப்பதற்கும் ஈஸ்வரின் பெற்றோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்றார்.

இவ்வளவு இளம் வயதிலேயே சிறப்பான ஒரு ஒரு படத்தை ஈஸ்வர் உருவாக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறினார்.

“இந்த இளம் குழுவினரின் திரைப்படத்தின் தரம் உண்மையில் பாராட்டத்தக்கது. முழு அணியின் கடின உழைப்பும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கிய ஈஸ்வர் திரைப்படத்தைப் பற்றி பேசுகையில்….

“இது ஒரே இரவில் இரண்டு பேருக்கு இடையே நடக்கும் காதல் கதை என்று கூறினார்.

“நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ​​ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு பாடலில் வரும் ‘கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம்’ என்ற ஒரு குறிப்பிட்ட வரி இந்த படத்திற்கு உத்வேகம் அளிக்கிறது,” என்றார்.

”காற்றினிலே படத்தில் நெருக்கமான காட்சிகள், போதை பொருட்கள் மற்றும் மதுபானங்கள் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு படத்தை நான் எடுக்க விரும்பினேன். படம் பார்த்தவர்கள் பாரட்டியுள்ளார்கள்.

ஒரு பிரபலமான ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்”, ‘என்று அவர் மேலும் கூறினார்.

“ஆறாம் வகுப்பிலிருந்து நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை உருவாக்க தொடங்கினேன். பின்னர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க விரும்பினேன், இதன் விளைவாக இப்போது ‘காற்றினிலே’ உருவாகியுள்ளது.

என் பெரியப்பா ஒளிப்பதிவாளர் எம் வி பன்னீர்செல்வம் எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை எனது முன்மாதிரியாக கருதுகிறேன். இந்தப் படத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு, அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில காட்சிகளும் உள்ளன.”

கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஈஸ்வர், படிப்பை முடித்த பிறகு திரைப்படங்களை எடுக்க முயற்சி செய்யவுள்ளதாக கூறினார்.

அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் காற்றினிலே திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஈஸ்வரின் தாயார் விஜி பாலசந்தர் தயாரித்துள்ளார். யோகான் மனு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சுதர்ஷன் ஆர் செய்துள்ளார்.

Veteran Director Bhagyaraj and producer Ravindar Chandrasekaran appreciate Kaatriniley film directed by 18 year-old

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கௌரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ’96’.

கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

தமிழில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ் சினிமா அளவுக்கு இது வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், ’96’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் அஜய் கபூர்.

இதில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

’96’ ரீமேக் குறித்து விஜய்சேதுபதி தனது ட்விட்டர் கூறியிருப்பதாவது:

“ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.

’96’ படம் எனக்கு சந்தோஷமான அனுபவத்தை தந்தது.

இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை ஹிந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துகள். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

As an actor, it gives me immense joy to tell stories which strike a chord with the audience, the happiness is further elevated when it reaches a wider audience. ’96’ has been a lovely experience for me, now as Producer Ajay Kapoor takes this journey ahead with the Hindi remake, https://t.co/5FABpDWeDa

I wish him all the best! Can’t wait ???

#AjayKapoor
#AjayKapoorProductions

Makkal Selvan Vijay Sethupathi about 96 movie hindi remake

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி என்பவர் தன்னுடைய ஜி மீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் அறிமுகமாகிறார்.

இவர் பெண் வேடம் ஏற்றும் நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் அனித்ரா நாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) படமானது 2022ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ ஜீ.

சற்று முன் தான் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் நடித்த ‘வலிமை’ படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு ரிலீஸ்’ என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை ட்விட்டரில் டேக் செய்து தான் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#ValimaiPongal ? mass update sir @BoneyKapoor ????

#வலிமையுடன் எங்கள் பப்ஜி பொங்கல்
#PUBGPONGAL
@vijaysrig Directorial
@Onlyarjuman @Aishwaryadutta6
@mimegopi @catchAnithra @cinemabala @NaviinRavindran
@LahariMusic @onlynikil @onlygmedia #PUBGPONGAL https://t.co/BuBE00gNW2

Director Vijay’s PUBG will release on Pongal

ரஜினியால் ஒதுங்கிய அஜித்.? ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினியால் ஒதுங்கிய அஜித்.? ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயா நடித்துள்ளார்.

நேற்று செப்டம்பர் 21 கார்த்திகேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திகேயாவின் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்தினர்.

அப்போது கூட வலிமை ரிலீஸ் குறித்த அறவிப்பு எதுவுமில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனிகபூர் “அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ்’ என அறிவித்துள்ளார்.

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு வலிமை வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரஜினியின் ”அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களை ஆக்ரமித்து விட்டதால் வலிமை அஜித்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

மேலும் சூட்டிங்கும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என தெரிகிறது.

Ajith’s Valimai official release date is here

ஷார்ட் கட்-டில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய படத்திற்கு டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் 2 விருதுகள்

ஷார்ட் கட்-டில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய படத்திற்கு டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் 2 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ பெற்றுள்ளது.

மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார்.

மேலும் இப்படத்தில் உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் ‘அறம்’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர்…

“எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில்,…

“பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது.

இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்,” என்றார்.

“கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ரெட் ஜெமினி’ காமிராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மணி & மணி கிரியேஷன் தயாரித்துள்ள ஷார்ட் கட், அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கே எம் ரயான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்புக்கு விது ஜீவா பொறுப்பேற்றுள்ளார்.

எம் சிவராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஷார்ட் கட்’ மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ShortCut a socio-political movie has bagged 2 awards at the Toronto Tamil International Film Festival.

சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது.

காசு என்று தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப் பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார் இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இணைப்பு: http://youtu.be/zQ9uMQJxHGc

அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை
, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.

Kaasu from Raame Aandalum Raavane Aandalum goes viral

More Articles
Follows