தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஸ்வாசம் படத்தை முடித்து விட்டு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித்.
தற்காலிகமாக , ‘தல 59’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதில் வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம்.
இவர் ஏற்கெனவே அஜித்துடன் ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து டெல்லி கணேஷ் நடித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Veteran actor Delhi Ganesh joins with Ajith in Thala 59