வஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்

Vanjagar Ulagam 2nd single track will be released by Madhavanசாம்.சி.எஸ் இசையமைப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’.

இதில் ஒரு இடம் பெறும் ஒரு முக்கியமான பாடலை யுவன் சங்கர் பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்

அந்த ரொமான்டிக் மெலோடியை நடிகர் மாதவன் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிபி நாயகனாகவும், அனீஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.

லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

Vanjagar Ulagam 2nd single track will be released by Madhavan

Overall Rating : Not available

Related News

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா…
...Read More
தனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின்…
...Read More
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்…
...Read More

Latest Post