வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக கமல்ஹாசனுக்கு உத்தரவு

வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக கமல்ஹாசனுக்கு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan stillsசினிமா துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாது, தன் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் வெளிப்படையாக கூறி வருபவர் கமல்ஹாசன்.

அண்மையில் ஒரு பேட்டியில் மகாபாரதம் குறித்து தன் கருத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த கருத்து சர்ச்சைக்குரியானது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார்.

இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவு செய்தார்.

இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது, இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வருகிற மே 5ஆம் தேதி கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Valliyur Court order in the issue of Kamal speech insulting Hindu epic Mahabharat

தமிழ் முதல் இந்தி வரை… இயக்குநர் தனுஷுக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் முதல் இந்தி வரை… இயக்குநர் தனுஷுக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director dhanushகோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் முதன்முறையாக இயக்கிய ப பாண்டி படம் அண்மையில் வெளியானது.

படம் ரசிகர்களிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளதால் தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இவர் புதிதாக இயக்க வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

இதுவரை தமிழில் இரண்டு படங்களை இயக்கவும், இந்தியில் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dhanush getting chances to direct 2 Tamil and 1 Hindi movie

‘எச்சரிக்கை’ விடும் சத்யராஜீக்கு கைகொடுத்த பிரபல இயக்குனர்கள்

‘எச்சரிக்கை’ விடும் சத்யராஜீக்கு கைகொடுத்த பிரபல இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Echcharikkaiசத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

கடந்த சில நாட்களாகவே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற போஸ்டர்கள் தமிழகத்தை கலக்கி வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாலா வெளியிட்டுள்ளனர்.

இதில் சத்யராஜ் உடன் வரலக்ஷ்மி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் சர்ஜூன்.கே.எம். என்பவர் இயக்கவுள்ளார்.

சுந்தரமூர்த்தி.கே.எஸ். இசையமைக்க சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை சி.பி.கணேஷுடன் இணைந்து ‘டைம் லைன் சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கிறார்.
C92sxRYUAAA8kaB
C92utCHV0AAVhPf
C92mKUcUAAApgsH

திடீர் பெற்றோர் மனு தள்ளுபடி; வழக்கில் ஜெயித்தார் தனுஷ்

திடீர் பெற்றோர் மனு தள்ளுபடி; வழக்கில் ஜெயித்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushநடிகர் தனுஷ், தங்கள் மகன் என மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக விசாரணை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்காக பல ஆதாரங்களை அந்த தம்பதியினர் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி தனுஷ் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில் தற்போது கோர்ட் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில். உங்கள் மகன் காணாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் தனுஷ் இல்லை. என்று கூறி, அவர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Madurai Court rejected the Case against Dhanush

அஜித்தின் அடுத்த படம்; மீண்டும் தெறிக்க விட்ட ரசிகர்கள்

அஜித்தின் அடுத்த படம்; மீண்டும் தெறிக்க விட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajith stillsசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வருகிற மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், அதற்கேற்ற போல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் கலராக இல்லாமல், கருப்பு வெள்ளையாகவுள்ளது.

இதில் அஜித் ஸ்டைலாக நிற்பதும் போன்றும் அவர் அருகே ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளது.

ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட இந்த ஸ்டில்லையும் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த ஸ்டில்க்கும் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட்டாக்கி தெறிக்க விட்டனர்.

Vivegam movie ajith new look with helicopter

vivegam sai ram

தனுஷ்-ரஞ்சித் படத்தில் இஸ்லாமியராக ரஜினிகாந்த்

தனுஷ்-ரஞ்சித் படத்தில் இஸ்லாமியராக ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini dhanush ranjith movie photo shoot updatesகபாலியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.

தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்161 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய டானாக நடிக்கவிருக்கிறாராம்.

1926 முதல் 1994 வரை வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்ற இஸ்லாமியரை பற்றிய வாழ்க்கைதான் இக்கதை என கிசுகிசுக்கப்படுகிறது.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர், ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பினாராம்.

இவர் மும்பையில் வாழ்ந்த ஒரு தமிழர் எனவும், அங்கு கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், பாலிவுட் நட்சத்திரங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இவர் நெருக்கமானவராக இருந்தாராம்.

கருப்புப்பணத்தில் தாதா போல இவர் வாழ்ந்தாலும், இவர் வெள்ளை பொருட்களையே அதிகம் பயன்படுத்துவாராம்.

மும்பையில் வாழ்ந்த தமிழர்களுக்கும் முக்கியமாக முஸ்லீம் இளைஞர்களுக்கு இவர்தான் ஹீரோ என கூறப்படுகிறது.

இதற்குமுன் பாட்ஷா படத்தில் இஸ்லாமிய பெயருடன் நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

மேலும், ரஜினி நடிக்க, ஜக்குபாய் என்ற பெயருடன் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு அது கைவிடப்பட்டு, அதன்பின்னர் சரத்குமார் அப்படத்தில் நடித்தார்.

Rajini may act in muslim boy character in Ranjith Dhanush Project

 

 

rajini jaggubhai

 

More Articles
Follows