தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.
நிக் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தி.
எஸ் எஸ் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாகவே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி எஸ் எஸ் சக்கரவர்த்தி காலமானார்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இவரது உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “நண்பா! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? அஜித்தை வைத்து நீ தயாரித்த வாலி, முகவரி, சிட்டிசன் ரெட், வில்லன், ஆஞ்சநேயா வரலாறு ஆகிய 7படங்களுக்கும் என்னையே எழுத வைத்தாயே தமிழ்க் காதலா! காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? கலங்குகிறேன்; கலையுலகம் உன் பேர்சொல்லும்” என பதிவிட்டுள்ளார்.
vairamuthu has expressed his condolences to producer ss chakravarthy