தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.
இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாளில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ்நாட்டில், மூன்றாம் நாளின் முடிவில் ரூ 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தெலுங்கில் ‘சார்’ என்ற தெலுங்குப் பதிப்பு தெலுங்கு மாநிலங்களில் இருந்து 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் படத்தின் வசூல் சுமார் 5 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
Vaathi Box Office third Day Collection Update