தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.
இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 17 அன்று தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியானது
இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இப்படம் அதிகாரப்பூர்வமாக ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிளப்பில் நுழைந்ததாக தயாரிப்பு நிறுவனம் மார்ச் 4 அன்று ட்விட்டரில் அறிவித்தது.
புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர்கள், “வாத்தி/ சார் மீதான காதல் தடுக்க முடியாதது. படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அபரிமிதமான ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளனர்.
dhanush’s ‘vaathi’ collections in 100 crore