சீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி

Udhayanidhi refuses Makkal Anban title given by Seenu Ramasamyஉதயநிதி மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

மதுரை மற்றும் வாடிப்பட்டி பகுதியின் வாழ்க்கை முறைகளை பின்னணியாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில், என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “உங்கள் அன்புக்கு நன்றி சார். அந்த அளவிற்குத் தகுதி எனக்கு இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை. படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார் சீனு ராமசாமி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த பட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என விஜய்சேதுபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi refuses Makkal Anban title given by Seenu Ramasamy

Overall Rating : Not available

Related News

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு…
...Read More
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி…
...Read More

Latest Post