தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கில் மக்களை வீட்டிலேயே வைத்திருக்க பல பல யுக்திகளை சினிமா கலைஞர்கள் செய்து வருகின்றனர்.
வெளியே செல்லாமல் மொபைலில் சூட்டிங் நடத்தி எடிட்டிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் ஃபேமிலி என்ற குறும்படத்திற்காக அமிதாப், ரஜினி, மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் வீட்டிலேயே இருந்து நடித்து கொடுத்தனர். பின்னர் எடிட்டர் அந்த வீடியோக்களை இணைத்து வெளியிட்டார்.
அந்த குறும்படத்தின் மூலம் கிடைத்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர்.
அதுபோல் கமல்ஹாசனும் அன்பும் அறிவும் என்ற பாடலை தங்கள் வீட்டில் இருந்தபடியே பல பாடகர்களை அவர்களை வைத்து இயக்க சொல்லி அந்த பாடலை வெளியிட்டார்.
தற்போது இயக்குனர் கௌதம் மேனன் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் த்ரிஷா நடித்துள்ளார்.
வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு ஆக்டிங்கை கௌதம் சொல்ல சொல்ல அதை த்ரிஷா செய்துள்ளார்.
இதை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதை த்ரிஷா படமாக்கி எடிட்டிங்கிற்காக அனுப்பியுள்ளார்.
விரைவில் இக்குறும்படம் வெளியாகும் என தெரிகிறது.
Trisha and Gautam menon team up again even in lock down