ரஜினி-கமலின் அரசியல் பேச்சால் தமிழக அரசின் அதிரடி உத்தரவு

ரஜினி-கமலின் அரசியல் பேச்சால் தமிழக அரசின் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and kamal haasanநடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இருவரும் கல்லுாரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களிடையே கலந்துரையாடி அரசியல் பேசி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மத்திய – மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பேசியிருந்தனர்.

இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். மாணவர்களின் மனப்பான்மை பாதிக்கப்படும்.

கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் அரசியல் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை, மாணவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான விழாக்களுக்கு, கல்லுாரிகள் அனுமதி தரக்கூடாது. இதுகுறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலிய தூதரகத்தில் தமிழர் ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள்

இத்தாலிய தூதரகத்தில் தமிழர் ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Artist AP Sridhars drawings at The Cadent Coalition eventஉலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி.

அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி.

சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான்.

உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும்.

இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?.

இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்கு, தனது தூரிகைகளால் உயிர் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள் “The Cadent Coalition” என்னும் தலைப்பில் புது டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலிய தூதரகமும், இந்திய கலாச்சார மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இக்கண்காட்சியின் தொடக்க விழா 02/05/2018 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் திரு.ரீவா கங்குலி தாஸ் (Director General, ICCR) மற்றும் திரு.லோரான்சோ ஏஞ்சலோனி (Ambassador Of Italy To India) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு ஓவியர் A.P.ஸ்ரீதரை வாழ்த்தினர்.

03/05/2018 முதல் 31/05/2018 வரையிலும் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாட்களிலும் பல முக்கியமான கலையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Artist AP Sridhars drawings at The Cadent Coalition event

Artist AP Sridhars drawings at The Cadent Coalition event

அஜித்தை வாழ்த்தி அசிங்கப்பட்ட சுசீந்திரன்.?; ரகசியத்தை உடைத்த இலக்கியன்

அஜித்தை வாழ்த்தி அசிங்கப்பட்ட சுசீந்திரன்.?; ரகசியத்தை உடைத்த இலக்கியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith Birthday wish and Director Suseenthiran issueகடந்த மே 1ஆம் தேதி நடிகர் அஜித் தன் 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரை திரையுலக சேர்ந்த பல பிரபலங்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதில் வழக்கம் போல ஒரு கடிதம் எழுதி தன் வாழ்த்துக்களை தெரிவித்தி இருந்தார் டைரக்டர் சுசீந்திரன். அதில்…

“நான் உதவி இயக்குனரா இருந்தபோது ரோஜா ரமணன் என்றொரு உதவி இயக்குனர் இருந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு வந்தது.

அவரின் சிகிச்சைக்காக ரூ. 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நான் அஜீத் சாரை சந்தித்து கேட்டேன். அவர் பெருமளவு பண உதவி செய்தார்” என்று கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை இலக்கியன் என்ற உதவி இயக்குனர் மறுத்துள்ளார்.

“சுசீந்திரன் சொல்வது அநியாயப் பொய். ரோஜா ரமணன் ஆவி கூட இதை மன்னிக்காது. அவருக்காக அஜீத்திடம் பேசியது நான்தான்.

அவர் எந்த பண உதவியும் செய்யவில்லை. அஜீத்திடம் கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதற்காக சுசீந்திரன் பொய் சொல்கிறார்” என்று அவர் தன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ajith Birthday wish and Director Suseenthiran issue

திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு நான் இருப்பேன்…: சத்யராஜ் பேச்சு

திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு நான் இருப்பேன்…: சத்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cultural tradition of caste and religion made women slaves says Sathyarajதிரைப்படத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-

“சாஸ்திரம், சடங்குகள், கலாசாரம் ஆகியவைதான் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும்.

திரையுலகில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் உரிமைக்காக போராட முடியும். திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

நடிகைகள் ரோகிணி, சச்சு, டைரக்டர்கள் பா.ரஞ்சித், புஸ்கர் காயத்ரி, பாலாஜி சக்திவேல், பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Cultural tradition of caste and religion made women slaves says Sathyaraj

sifwa awards

வருங்கால கணவருடன் உல்லாச உலகம் சுற்றும் நயன்தாரா

வருங்கால கணவருடன் உல்லாச உலகம் சுற்றும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara and Vignesh Shivan Recent photos goes viralதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரிகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

விரைவில் தன் வருங்கால கணவர் விக்னேஷ் சிவனை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Nayanthara and Vignesh Shivan Recent photos goes viral

5 நாட்களில் ரூ. 5000 கோடி வசூல்; அசர வைக்கும் அவெஞ்சர்ஸ்!

5 நாட்களில் ரூ. 5000 கோடி வசூல்; அசர வைக்கும் அவெஞ்சர்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avengers Infinity War box office collection reportஉலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த ஏப்ரல் 27 அன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது.

ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.

இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது.

5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

Avengers Infinity War box office collection report

More Articles
Follows