தும்பா படப்பிடிப்பு நிறைவு

New Project (1)அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த புலி தும்பா வேண்டுமானால் அழையா விருந்தாளியாக இருந்திருக்கலாம் (விளம்பர வீடியோவில்), ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமும், அதில் இருக்கும் குழந்தைகளும் புலி தும்பாவின் ராஜாங்கத்துக்குள் பயணிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த கோடையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் படமாக தும்பா இருக்கிறது. மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, “தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது. இருவருமே பயணக்கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும் படங்களை ரசிப்பவர்கள். இயக்குனர் ஹரிஷ்ராம் எங்களுக்கு கதையை விவரிக்கும் போது, நாங்கள் மிகவும் ரசித்தோம், ஆனால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது தான், அந்த அடர்ந்த காடுகளில் படம் பிடிக்க ஒட்டுமொத்த குழுவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்தோம். சில இடங்களில், படப்பிடிப்பு நடத்த மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் அதையும் தாண்டி படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். வாகமோன், இடுக்கி, பாலக்காடு, சென்னை மற்றும் குமிலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். திரையரங்குகளில் பார்வையாளர்களால் வெறுமனே படத்தை மட்டும் ரசிக்காமல், இந்த இடங்களின் அழகிய காட்சிகளையும் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது உறுதி” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த படத்தின் அறிமுக வீடியோ மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘புதுசாட்டம்’ பாடல், YouTubeல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. மற்ற பாடல்களுக்கு விவேக் மெர்வின் & சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப்பயிற்சி), ராம் ராகவ், ஏ ஆர் பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர், பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார்.

Overall Rating : Not available

Related News

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு…
...Read More
சில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும்…
...Read More

Latest Post