‘நடிகர்களை அனுமதிக்கிறாங்க; அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க…’ – தொல்.திருமாவளவன்

‘நடிகர்களை அனுமதிக்கிறாங்க; அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க…’ – தொல்.திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirumavalavan interview about Students Jallikattu Protestதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இதுகுறித்து பேச மக்கள் நல கூட்டணி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

அப்போது அவர் பேசியதாவது…

ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதை வரவேற்கிறோம்.

ஆனால் அவர்கள் ஒரு அமைப்பை மட்டும் சுட்டிக்காட்டி சாடி வருவது ஏன்? அவர்களுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள்.

போராட்ட களத்திற்கு நடிகர்கள் அனுமதிக்கும் அவர்கள், அரசியல்வாதிகளை விடமாட்டுறாங்க.” என்று பேசினார்.

Thirumavalavan talks about Students Jallikattu Protest

மோடியை சந்தித்த பின்னரும் சென்னை திரும்பாத ஓபிஎஸ்

மோடியை சந்தித்த பின்னரும் சென்னை திரும்பாத ஓபிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ops_modiஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக இளைஞர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என மோடி தெரிவித்து விட்டார்.

இதனையறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் அறவழிப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை சென்னை திரும்ப இருந்த முதல்வர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

காவேரிக்கு முடியாது; ஜல்லிக்கட்டுக்கு ஏன்.? நடிகர் சங்கத்துக்கு இளைஞர்கள் கேள்வி

காவேரிக்கு முடியாது; ஜல்லிக்கட்டுக்கு ஏன்.? நடிகர் சங்கத்துக்கு இளைஞர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigar sangamதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தி வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக ஆதரவாக நடிகர் சங்கம், தங்களது சங்க மைதானத்தில் நாளை மௌன போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நடிகர் சங்கம் பங்கேற்காது என சில மாதங்களுக்கு முன்பு கூறிய நடிகர் சங்கம் தற்போது மட்டும், ஜல்லிக்கட்டுக்கு போராடுவது ஏன்? என போராட்டக் குழுவினர் கேட்டு உள்ளனர்.

இளைஞர்கள் மீது இருக்கும் மீடியா கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள் என்று கூறி, நடிகர் சங்க போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் புரட்சி மாணவர்கள்.

Jallikattu protestors voice against Nadigar Sangam

நாளை நடிகர் சங்கம் போராட்டத்தில் அஜித் இணைவாரா?

நாளை நடிகர் சங்கம் போராட்டத்தில் அஜித் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil actor rajini kamal vijay ajithபீட்டா அமைப்பை தடை செய்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் அறவழிப் புரட்சி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை ஜனவரி 20ம் தேதி மௌன போராட்டம் நடத்த உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் நடிகர் அஜித்தும் கலந்து கொள்வார் என அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

Will Ajith participate in Nadigar Sangam protest for Jallikattu

வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு புரட்சி… வாயே திறக்காத அஜித்

வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு புரட்சி… வாயே திறக்காத அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithஅரசியல் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமல் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து, ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கிற அளவுக்கு வரலாறாக அமைந்துள்ளது.

இதற்கு ஜிவி. பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி, லாரன்ஸ், மயில்சாமி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் அறிக்கை வாயிலாகவும் வீடியோ பதிவாகவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து எந்தவொரு அறிவிப்பையோ ஆதரவையோ முன்னணி நடிகரான அஜித் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whether Ajith will break his Silence in Youth’s Jallikattu Protest

‘மோடியை சந்தித்து பப்ளிசிட்டி தேடாதீங்க விஷால்’ – சுரேஷ் காமாட்சி

‘மோடியை சந்தித்து பப்ளிசிட்டி தேடாதீங்க விஷால்’ – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Suresh Kamatchiபீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் எனவும் தமிழக இளைஞர்கள் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நான் தனிப்பட்ட முறையில் போராடுகிறேன் என கூறிய விஷால் இன்று டெல்லிக்கு சென்று மோடியை சந்திக்க விருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் விஷாலுக்கு தன் கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் உள்ளபடியே…

இந்த சமூகம் பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது.

எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம்.

எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது.

எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது.

எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள்.

மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள்.

அய்யா இது எங்கள் போராட்டம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

நடுவில் நான் போய் மோடியைப் பார்க்கிறேன் என்று கிளம்புகிறீர்கள். நாளை இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது இருக்க வேண்டும்.

நான் டில்லியில் கடிதம் கொடுத்தேன். சல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அவமானம் எங்களுக்குத் தேவையில்லை.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் திட்டம் போட்டு நீங்கள் காய் நகர்த்த நினைக்கும் காரிய சாதிப்பு எம் இளைஞர்கள் மத்தியில் வேலைக்காகாது என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்றுவரை நீங்கள் பீட்டாவில் இருக்கிறீர்கள் என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வரவேயில்லையா? இல்லை அதை மறுப்பதற்கு நீங்கள் கூப்பிட்டதும் ஓடோடி வரும் மீடியா கிடைக்கவில்லையா?

இன்று சந்திப்பில் சொல்லிய அனைத்தையும் ஆறு மாசத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாமே? எம் மக்கள் திரண்டதைக் கண்டதும் பயம் வந்து பேட்டிகொடுத்துவிட்டீர்கள்.

சரி இப்போவாவது சொன்னீர்களே.. இனி உங்களைப் போன்ற இரட்டை வேட நாடகமாடிகளின் ஆதரவு தேவையில்லை.

நீங்கள் யாராகயிருந்தாலும் அதை நாங்கள் இனவேறுபாடு பார்க்காமல் இந்த நிலத்தில் நடிகர் என்ற மரியாதையை தந்திருக்கிறோம். அதை நல்ல படங்களில் நடித்து நடிகர் சங்க வேலைகளை கவனித்து நகருங்கள். உங்கள் வேலை அதுமட்டும்தான்.

எங்கள் மக்களின் புரட்சியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இது எதைக்கட்டி இறக்கினாலும் அமைதியாய் அலையோடு நிறுத்திக்கொள்ளும் ஆழ்கடல் அல்ல.

அமைதியை உடைத்து சுனாமியாக மாறும் சீற்றமும் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு ஓரமாய் போய் நின்று வேடிக்கைப் பாருங்கள்.

இனி எங்கள் தேவைகளை நாங்களே போராடிப் பெற்றுக்கொள்வோம். நீங்கள் இந்த போராட்டத்தை வைத்து பப்ளிசிட்டி பிழைப்பு நடத்த வேண்டாம்.

மீடியா நண்பர்களே.. எதற்கெடுத்தாலும் விஷால் கூப்பிட்டாருன்னு ஓடாதீங்க. அவர் என்ன முதல்வரா இல்லை மக்கள் பிரதிநிதியா?

அவர் ஒரு நடிகர் சங்க செயலாளர் அவ்வளவுதான். அவர் நடிகர் சங்கத்தைப் பற்றிப் பேசினால் எடுத்து கொட்டை எழுத்தில் போடுங்கள்.

நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பற்றி அவரிடம் தயவுசெய்து கேட்காதீர்கள். அவர் கூப்பிட்டுப் பேசினாலும் போடாதீர்கள். அவருக்கு பேட்டியளிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேளுங்கள்.

இன்னமும் என் சமூகத்தை நேசித்து ஆளும் தகுதியுள்ளவர்களின் பேச்சை எடுத்துப் போடுங்கள். இல்லையேல் மக்கள் அவர்களே ஒரு மீடியாவாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இன்றைய சல்லிக்கட்டு தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றியிருக்கிறது.

அது திரு. விஷால் அவர்களே, இந்த சல்லிக்கட்டுப் போராட்டம் உங்களைப் போன்ற விலங்கு நேசிகளை பதட்டமடையச் செய்திருக்கிறது என்ற உண்மையை இதன்மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் மட்டுமல்ல. இந்த தேசமே மக்கள் புரட்சி என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி ஒருபோதும் தோற்றதே இல்லை. புரிந்து உங்கள் தகுதி பார்த்து பேசுவதோ பேட்டிக்கொடுப்பதோ இருக்கட்டும்.

மற்றவை எம் இளைஞர்கள் கையிலும் மாணவர்கள்
கையிலும் இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நன்றி!
சுரேஷ் காமாட்சி, திரைப்படத் தயாரிப்பாளர்

More Articles
Follows