தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனம் இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பாஜக.வினர் இந்த வசனங்களை எதிர்க்க தொடங்கினர்.
ஆனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, தேசிய கட்சித் தலைவர்கள் வரை கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் மெர்சல் படத்தில் பேசிய வசனங்கள் சரியானதே என கூற தொடங்கிவிட்டனர்.
இதனால் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வலுக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திலிருந்து எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை. வசனங்களும் நீக்கப்படவில்லை.
எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அரசுக்கும் பா.ஜ.க நண்பர்களுக்கும் நன்றி.
தேவைப்பட்டால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அறிவித்துள்ளார்.
There is no cuts and Mute dialogues in Mersal says Producer Hema Rukmani