தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் ‘தப்பு தண்டா ‘.
இப்படத்தில் சத்யா கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும், ஜான் விஜய் மற்றும் ‘விசாரணை’ புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
”ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின் அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே.
அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின் ‘தப்பு தாண்டா’ விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும்.
தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ‘ செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்’ ன் ஜோன்ஸ் அவர்கள் எங்களது ‘தப்பு தாண்டா’ வை வெளியிடப்போவதில் எங்களுக்கு அளவற்ற பெருமை.
இந்த படத்திற்கு சென்சார் குழு ‘யூ ‘ சான்றிதழ் வழங்கியுள்ளதும் எங்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ஜூலை 15 ஆம் தேடி ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா’ விற்கான விளம்பர பணிகளை வரும் நாட்களில் தொடங்க உள்ளோம்” என கூறினார் புதுமுக இயக்குனர் ஸ்ரீகாந்தன்.
Thappu Thanda movie certificate and release date is here