விஜய் 60 படத்தில் கீர்த்தியின் தாய்மாமனாக தேசிய விருது நடிகர்..!

விஜய் 60 படத்தில் கீர்த்தியின் தாய்மாமனாக தேசிய விருது நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 60 stillsநாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக தம்பி ராமைய்யா நடிக்கிறாராம்.

இவர் மைனா படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினாரா ஜி.வி.பிரகாஷ்..?

எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினாரா ஜி.வி.பிரகாஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash new imagesசாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மொட்டை ராஜேந்திரன், சரவணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் எம்ஜிஆரின் கண்ணை நம்பாதே பாடல் மற்றும் சந்திரபாபுவின் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவே ஆகிய பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜிவி. பிரகாஷ் கூறியதாவது…

நான் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 50 படங்களுக்கு இசையமைத்துவிட்டேன்.

ஆனால் இதுவரை எந்த ஒரு பழைய பாடலையும் ரீமிக்ஸ் செய்யவில்லை. ஆனால் அந்த ஆசை வெகுநாளாக இருந்தது.

எனவே மற்ற நடிகர்களின் படங்களில் பயன்படுத்துவதை விட, என்னுடைய படத்தில் பயன்படுத்த நினைத்தேன்.

கண்ணை நம்பாதே என்ற எம்ஜிஆரின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அதை கொஞ்சம் மாற்றி காலேஜ் கானா பாடலாக போல வைத்துள்ளோம். கானா பாலா இப்பாடலை பாடியிருக்கிறார்.

மற்றபடி யாரையும் அவமானப்படுத்தவும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. யார் மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.” என்றார்.

வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘கபாலி’ டயலாக், நெருப்புடா…!

வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘கபாலி’ டயலாக், நெருப்புடா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali imagesரஜினி நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜீன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.எனவே, ரஜினி ரசிகர்களின் ஆவல் கட்டுங்கடங்காத அளவில் பெருகி வருகிறது.

இதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ‘நெருப்புடா’ என்ற பாடல் மிகுந்த எதிர்பார்ப்ப உருவாக்கியுள்ளது.இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ‘நெருப்புடா பாடலின் 30 நொடி ஓடக்கூடிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

அந்த பாடல் வரிகள்..

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

அடிக்கிற அழிக்கிற எண்ணம்

முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பற கபாலீ…

என்று வரிகள் கொண்ட பாடல் அனலாய் பறக்க செய்கிறது.

மேலும்….

“நான் வந்துன்டேன்னு சொல்லு… திரும்பி வந்துடேன்னு…. 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு.. கபாலிடா.. என்று ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகளும் வெளியாகியுள்ளது.

இது கபாலி குழுவினரை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் பாணியில் சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’..!

ஹாலிவுட் பாணியில் சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj new photosஅறிவழகனின் உதவியாளர் மணி செய்யோன் இயக்கும் படம் ‘கட்டப்பாவை காணோம்’.

இப்படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷாந்தினி, காளி வெங்கட், ‘யோகி’ பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், மற்றும் நலன் குமாரசாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
மேலும் தமிழ் சினிமாவில் முதன்முறையாக மீன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறதாம்.

இதற்கு முன்பு ‘ஃபைண்டிங் நீமோ’ என்ற குழந்தைகளுக்கான ஹாலிவுட் படத்தில் மீன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார்.

கண்ணா… கபாலி ஆடியோ உடன் ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

கண்ணா… கபாலி ஆடியோ உடன் ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali imagesநாளை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பாடல்கள் வெளியாகவுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை நாளை மிகச்சரியாக 11.06AM மணியளவில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இத்துடன் ஒரு சர்ப்ரைஸ் செய்தியையும் ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் 36 நொடி டீசர் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார்களாம்.

ரஜினி கபாலி ஆடியோவிற்கு நேரில் வரவில்லை என்பதால், அதனை ஈடுக்கட்ட இதுபோன்ற சில விஷயங்களை கபாலி குழுவினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘சைமா என் குடும்பம்; ராணா என் நண்பன்..’ ஜெயம் ரவி நெகிழ்ச்சி..!

‘சைமா என் குடும்பம்; ராணா என் நண்பன்..’ ஜெயம் ரவி நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi and Rana Daggubatiதமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களை ஒன்று சேர்க்கும் வகையில் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான விழா ஜூலை 1 சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிடவிருக்கிறார்கள்.இந்நிலையில், இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சைமா குழுவினர்.

அதில் குஷ்பூ, ஜெயம் ரவி, ராணா, வேதிகா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது ஜெயம் ரவி பேசியதாவது…

“இந்த சைமா விழா ஒரு தனிப்பட்ட விழாவாக தெரியவில்லை. சைமா என் குடும்பம். குடும்பத்தில் ஈகோ, பொறாமை எதுவும் இருக்காது. அதுபோல்தான் இந்த விழாவும்.ராணா என் நண்பனை போன்றவர். இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

சென்ற வருடம் சைமாவில் கலந்துகொண்ட போது எந்தப் படத்திற்காகவும் நான் விருது வாங்கவில்லை.ஆனால் இம்முறை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.

More Articles
Follows