விஜய் பயிலகத்தில் இலவச ரொட்டி முட்டை பால்; ‘லியோ’ ஆட்டம் ஆரம்பம்

விஜய் பயிலகத்தில் இலவச ரொட்டி முட்டை பால்; ‘லியோ’ ஆட்டம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கொண்டாட்டங்களை ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு

தளபதி அவர்கள் நடித்த ‘லியோ’ படம் வெளியாவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் *தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா ரொட்டி முட்டை பால் திட்டம்* ஆரம்பம்…

*பொதுச்செயலாளர்* அறிவுறுத்தலின்படி,,

நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் *ஜாகீர் உசேன்* தலைமையில்,

*நெல்லை கிழக்கு பகுதி தொண்டரணி தளபதி மக்கள் இயக்கம்* சார்பாக,

*நெல்லை தொகுதிக்குட்பட்ட. கீழக்கரையில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில், திரளான தொண்டர்களுடன் தளபதி விஜய் பயிலகம்* திறக்கப்பட்டு அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது…

அதனை தொடர்ந்து

1 வருடத்திற்கு வாரந்தோறும் *ஞாயிற்றுக்கிழமை* அன்று *குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள்* பயன்பெறும் வகையில் *இன்று காலை 11 மணி அளவில் முதல் 24.09.2023* (வாரம்)
(ஞாயிற்றுக்கிழமை)
*நெல்லை தொகுதிக்குட்பட்ட தச்சநல்லூர் பைபாஸ் (சாய் பாபா கோவில் எதிரில்) கீழக்கரையில்*,

*தளபதி விஜய் அவர்களின் விலையில்லா ரொட்டி, பால், முட்டை* வழங்கும் திட்டத்தின் மூலம் *குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு* வழங்கப்பட்டது…

*இயக்க சொந்தங்கள்* திரளான தொண்டரணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

*தளபதி விஜய் மக்கள் இயக்கம்*,
*நெல்லை மாவட்டம்…*

Thalapathy Vijay fans started Leo celebration

மார்க் ஆண்டனி வெற்றி விழா.; விஜய்க்கு நன்றி சொல்ல விஷால்.; அஜித்துக்கு நன்றி சொன்ன ஆதிக்

மார்க் ஆண்டனி வெற்றி விழா.; விஜய்க்கு நன்றி சொல்ல விஷால்.; அஜித்துக்கு நன்றி சொன்ன ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பேசியதாவது…

“நான் எப்பவும் விஜய் ஆண்டனியை ‘ராஜா’ என்றுதான் கூப்பிடுவேன். ஹைதராபாத்தில் இருக்கும்போது நானும், எஸ். ஜே சூர்யா சார், ஆதிக் ரவிசந்திரன் எல்லோரும் விஜய் ஆண்டனிக்கு நடந்த பேரிழப்புக் குறித்து பேசிய போது ‘நமக்கே மனசு இந்தளவிற்கு கனமாக இருக்கும்போது, அவரும் (விஜய் ஆண்டனி) குடும்பமும் எப்படி இதை எதிர் கொள்ளப் போகிறார்கள்’ என வருத்தப்பட்டோம்.

விஜய் ஆண்டனிக்கு மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கடவுள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியைக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்க பலமாக நான் இருப்பேன்” என்றார்.

ஆதிக் இனிமேல் கடிதம் எழுத வேண்டாம். உன் மேல் உள்ள நம்பிக்கையில் அடுத்த படங்கள் பண்ணுவதற்கும் தேதி கொடுப்பேன்.

ஆதிக் உடன் படம் பண்ணுறேன்னு சொன்னப்போ, நிறைய பேர் `அவர் கூட ஏன் படம் பண்றீங்கன்னு’தான் கேட்டாங்க. எனக்கு கன்டன்ட் பிடிச்சிருக்கு.. கரெக்டா பண்ணிடுவார்னு சொன்னேன்.

அந்த சமயத்தில் என்னிடம் அப்படி கேட்டவர்கள் இப்போ கால் பண்ணி ‘படம் நன்றாக இருக்கிறது. ஆதிக் ரவிசந்திரன் நன்றாக இயக்கியிருக்கிறார்’ என்றார்கள்.

எஸ்.ஜே சூர்யா மூன்று பக்கத்துக்கு டயலாக் உங்களுக்கு இந்த சீன்ல டயலாக் இல்ல என்று தயங்கி சொல்வான் ஆதிக்.

அது பிரச்னை கிடையாது. நான்தான் கைதட்டல் வாங்கணும் என்கிற அவசியம் கிடையாது. எல்லோரும் கைதட்டல் வாங்கணும்” என்று தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் குறித்து பேசிய விஷால்.. இப்படத்திற்கான தொடக்கமே எனக்கு பிடித்த என்னுடைய பேவரைட் நடிகரான விஜய் சாரிடம் இருந்துதான் ஆரம்பித்தது. இப்படத்திற்கான டீசரை அவர்தான் வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது…

எனது படங்கள் சரியாக போகாத நேரத்தில் அஜித் சார் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன்.. அப்போது அஜித் சார் எனக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். அதன் பிறகு தான் ‘மார்க் ஆண்டனி’ படத்தை ஆரம்பித்தேன்.. எனவே தற்போது அஜித் சாருக்கு நன்றி. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என பேசினார் ஆதிக்.

Vishal and Adhik Ravichandran speech at Mark Antony success meet

எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி இருக்கேன்.? – மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி இருக்கேன்.? – மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியதாவது…

“நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா போராடி வந்துட்டு இருக்கேன். என் பயணம் எல்லாருக்கும் தெரியும்.

2004ல் நியூ வெளியானது. 2005ல் அன்பே ஆருயிரே ரிலீஸ் ஆனது. இரண்டுமே பட்டையை கிளப்பியது. கோவை ஏரியாவில் பெரிய ஆர்டிஸ்ட் படம் 1.5 கோடி விற்ற போது, என் படம் 1 கோடி ரூபாய்க்கு விற்றது.

அப்படிப்பட்ட நான் எங்கே இருந்திருக்கனும்.. இப்போ எங்கே இருக்கிறேன்?

வாழ்க்கையில் அவ்வளவு வலி. ஆண்டவன், ஒரே உச்சத்தில் மேலே கொண்டு உட்கார வெச்சுட்டு , திடீரென கண்ணை பிடிங்கின மாதிரி ஆகிடுச்சு.

பல வருடமா, செத்து காணாமல் போய், திரும்ப எழுந்து, இறைவில் என்னுடைய வாழ்க்கை மீண்டும் தொடங்கியது.

அதன் பின் நிறைய படங்களில் நடித்து, மாநாடு வரை பேர் வாங்கி, கடைசியா மார்க் ஆண்டனியில் நல்ல பெயர் கிடைச்சிருக்கு.

நான் கடவுளிடம் கேட்பேன், ‘மக்கள் நம்மை எவ்வளவு ரசித்தார்கள், அந்த இடம் திரும்ப கிடைக்காதா?’ என்று கேட்டேன்.

அதை மார்க் ஆண்டனி வெற்றி 70% திருப்பி கொடுத்துவிட்டது. இதை தக்கவைத்து மக்களை தொடர்ந்து நான் சந்தோஷப்படுத்த வைப்பேன்,’’ என்று எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

SJ Suryah emotional speech at Mark Antony success meet

மாமா.. உங்க சின்ன வெர்ஷன்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. – எஸ்ஜே. சூர்யா

மாமா.. உங்க சின்ன வெர்ஷன்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. – எஸ்ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் நன்றி கூற பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசியதாவது…

ஆதிக் ரவிச்சந்திரன் அடிக்கடி என்னிடம் வந்து கதை சொல்வார். அதை எனர்ஜியா சொல்லுவார்.. ‘சார்.. உங்க எனர்ஜிக்கு நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு, என்னிடம் சொல்றீங்க, எனக்கு செட்டாக மாட்டேங்குது சார்’ என்றுதான் சொல்வேன்.

கொரோனா லாக்டவுன் காலத்தில், ஒரு கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. பண்ணலாம் என்று சொன்னேன்.

ஆனால் திடீரென வேறுஒரு நாள் வந்து. ‘சார், வேறு ஒரு படம் முதலில் பண்ணப் போறேன். விஷால் சார் தான் ஹீரோ, நீங்களும் பண்ணனும்’ என்றார்.

‘நல்ல பழுத்த பழமா, ஒரு கேங்ஸ்டர் ரோல் பண்ணனும்’ என்றார் ஆதிக். ‘சார்.. இப்போ தான் வாழ்க்கையில் போராடி ஏதோ ரோல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ போய், என்னை கிழவனா ஆக்கினால் எப்படி சார்’ என்று மறுத்துவிட்டேன்.

‘மாநாடு’ டப்பிங் போகும் போது, கீழே எனிமி படத்தின் பணிகள் போய்க் கொண்டிருந்தது.

அப்போ விஷால் என்னை பார்த்து ‘சார் அந்த கதை கேட்டீங்களா?’ என்று கேட்டார். வேண்டாம்’ என்றேன்.

‘சார்.. நீங்க கதை கேளுங்க, பிடிக்கலைனா வேண்டாம்’ என்றார். அன்று அவர் சொன்னதால் வேறு வழியின்றி கதை கேட்டேன்.

விஷால் என்னிடம் சொல்லாமல் போயிருந்தால், அதன் பின் ஆதிக் சாரை சந்தித்திருக்க மாட்டேன். இந்த படத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன்.

கதை கேட்டதும் பயங்கர சூப்பரா இருந்தது. விஷாலை அப்பா, பையன் கேரக்டர் வைச்ச மாதிரி. எனக்கும் அப்பா, மகன் கேரக்டர் வைங்க, அப்போ நான் வர்றேன் என்று கூறினேன்.

அப்போது 20 நாள் கழித்து வருகிறேன் சார் என்று போனார். வந்தார் பாருங்க, அப்படி ஒரு நரேஷன். என்ன ஒரு இயக்குனர் சார் அவர். அவரை அப்படியே கட்டிப்பிடிச்சுட்டேன்.

மார்க் ஆண்டனி பார்த்துட்டு எங்க அக்கா பசங்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள், ‘ஏன் மாமா.. இந்த ஆதிக் ரவிச்சந்திரன் உங்க சின்ன வெர்ஷன் போல’ என்றார்கள். எங்களுக்குள் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி செட் ஆகிவிட்டது.”

இவ்வாறு எஸ்ஜே. சூர்யா பேசினார்.

My junior version is Adhik Ravichandran says SJ suryah

சினிமாவில் அறிமுகமாகிறார் அரசியல்வாதி திருநாவுக்கரசர் மகன்

சினிமாவில் அறிமுகமாகிறார் அரசியல்வாதி திருநாவுக்கரசர் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நாயகனாகும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.

உதவி இயக்குனராக இருந்து கதாநாயகனாக நடிக்கும் திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் சாய் விஷ்ணு.

காங்கிரஸ் கட்சியின் முன்னால் தமிழ்நாட்டின் தலைவராகவும், முன்னால் மத்திய, மாநில எம். பியும், தற்போது காங்கிரஸ் எம். பி யாக பதவிவகித்து வரும் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு.

இவர் லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குனர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி சினிமாவை சிறப்பாக கற்றுக்கொண்டு தற்போது கதநாயகனாக அறிமுகமாகிறார். படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

எனது குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. எனது அப்பா மருதுபாண்டி என்ற படத்தை தியாரித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம் அதனால் சினிமாவை நன்றாக அறிந்துகொண்டு தற்போது நாயகனாக நடிக்கவிருக்கிறேன் அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்து எனது சினிமா பயணத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் சாய் விஷ்ணு.

Thirunavukkarasu MP son debut in Kollywood

விமல் பட தயாரிப்பாளருக்கு சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சௌந்தரராஜா

விமல் பட தயாரிப்பாளருக்கு சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச் சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாகி தற்போது நடிகராக உயர்ந்துள்ளவர் சௌந்தரராஜா.

இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’, ‘பிகில்’, ‘ஜெகமே தந்திரம்’ உள்பட 35-க் கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சௌந்தரராஜா விக்ரம் பிரபுவுடன் `ரெய்டு’ படத்தில் நடித்துள்ளார் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த விமலின் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சௌந்தரராஜாவின் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்தப் படம் கொரோனா கஷ்டங்களுக்கு மத்தியில் தயாராகி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கிய முழு சம்பளத்தையும் சௌந்தரராஜா திருப்பிக் கொடுத்து விட்டார்.

அவரது செயலை படக்குழுவினர் பாராட்டி உள்ளனர்.

மேலும், சௌந்தரராஜா தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இடிமுழக்கம்’, `சாயாவனம்’ உள்பட 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundararaja who returned the salary to the producer of thudikkum karangal

More Articles
Follows