தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்தாண்டு 2022 பொங்கலுக்கு ரிலீசாகிறது.
இந்த படத்தில் தன் பணிகளை முடித்து கொடுத்துவிட்டு பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.
அண்மையில் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம், அதன்பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லை, அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இவை அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலாகின.
ராஜஸ்தான் அருகே ஒரு மலையின் உச்சியில் அஜித் நிற்கும் படங்கள் நமக்கே மரண பயத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில் தல அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் என்பவர் தன் டிவிட்டரில் பதிவில் அஜித் பயணம் செய்த இந்தியா ரூட் வரைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக அஜித் சென்ற 30 நகரங்களின் வரைப் படத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தனர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Thala Ajith’s bike tour map goes viral