தல59 அப்டேட்ஸ்: விஸ்வாசத்திற்கு பிறகு அடுத்த படத்தை முடிவு செய்த அஜித்

தல59 அப்டேட்ஸ்: விஸ்வாசத்திற்கு பிறகு அடுத்த படத்தை முடிவு செய்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala 59 movie will be directed by Vinoth and Music by Sam CSசிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த 2019 வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு அஜித் தன் 59வது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் அல்லது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த 2019ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸை குறி வைத்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டு தொடங்கவுள்ளார்களாம்.

Thala 59 movie will be directed by Vinoth and Music by Sam CS

மீண்டும் மீண்டும் இணையும் சிம்பு-ஜோதிகா; இது 4வது முறை!

மீண்டும் மீண்டும் இணையும் சிம்பு-ஜோதிகா; இது 4வது முறை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movieசிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். இதனையடுத்து சரவணா என்ற படத்திற்காவும் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் சிம்பு.

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த படப்பிடிப்பின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.

இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movie

திறமைக்கு மதிப்பில்லை; முகத்துக்குத்தான் மதிப்பு.. கிராந்தி பிரசாத் குமுறல்

திறமைக்கு மதிப்பில்லை; முகத்துக்குத்தான் மதிப்பு.. கிராந்தி பிரசாத் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Talent doesnot value here Only Face value says Director Kranthi Prasathமுற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’.

இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பாடல் வரிகளுக்கு ஏற்ப மணல் ஓவியம் வரையப்பட்டது.

நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு கருத்தாக சொல்லப்பட்ட விதம் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை இல்லாத புதிய விழாவாக இது அமைந்தது.

விழாவில் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது…

“இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள்.

யார் நடித்தது? என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன் புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டீர்கள் ?

இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே ?” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த்,ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத் , ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி,அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன். எடிட்டர் கிராந்தி குமார்,தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Talent doesnot value here Only Face value says Director Kranthi Prasath

santhosathil kalavaram audio launch

பிரச்சினை இல்லாத வெற்றியேது; *சந்தோஷத்தில் கலவரம்* இசை விழாவில் பாக்யராஜ் பேச்சு

பிரச்சினை இல்லாத வெற்றியேது; *சந்தோஷத்தில் கலவரம்* இசை விழாவில் பாக்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There will not be success with out pain says Bhagyaraj Santhosathil Kalavaram audio launchமுற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

அவர் விழாவில் பேசும் போது

“இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார்.
எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது.

என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது. கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார்,அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார்.

இயக்குநர் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார் – பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும்.

நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் “பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்” என்று.

“பதினாறு வயதினிலே’ படத்தின் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம்,உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம், முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம்.

ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது படப்பிடிப்பு ரத்து என்றார்கள். போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது, தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும் ?

அதே மாதிரி என் முதல் படம் நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது.

எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும், பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும். வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும். கிராமத்தில் சொல்வார்கள் விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு? வெறட்டி எதுக்கு ? என்பார்கள்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன். படம் இந்த வகை என்று முடிவு செய்ய முடியவில்லை. அதனால் படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. ” என்றார்.

There will not be success with out pain says Bhagyaraj Santhosathil Kalavaram audio launch

வெர்ஜின் பசங்க-ளுக்காக மனிஷா பேசிய •••த்தா கெட்ட வார்த்தை

வெர்ஜின் பசங்க-ளுக்காக மனிஷா பேசிய •••த்தா கெட்ட வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manisha Shree use bad words for Virgin Pasanga web seriesநட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா ஸ்ரீ.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், வெர்ஜின் பசங்க என்ற வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார்.

அதில் இவரின் பெயர் நிஷா ••த்தா என வருகிறது.

அவர் பெயர் பற்றிய ஒரு காட்சி மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அது ஹிந்தியில் ஒரு வார்த்தையாக இருந்தாலும் தமிழில் அது கெட்ட வார்த்தை.

அந்த வசன காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற வார்த்தைகளை சின்ன குழந்தைகள் கண்டால், நிச்சயம் அது என்ன? என்று கேள்வி கேட்கும். எனவே சமூக நலன் கருதி இது போன்ற வார்த்தைகளை இவர்கள் தவிர்ப்பதே நலம்.

Manisha Shree use bad words for Virgin Pasanga web series

ரஜினி-விஜய் மட்டும் தான் செய்ய கூடாதா? கடுப்பாகும் ரசிகர்கள்

ரஜினி-விஜய் மட்டும் தான் செய்ய கூடாதா? கடுப்பாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajin vijay smokingதமிழ் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தாலே அதற்கு எதிர்ப்புகள் வருவது சகஜமாக விட்டது.

ஆனால் இது பெரிய நடிகர்களை மட்டுமே குறி வைத்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டைல் என்றாலே அது ரஜினிகாந்த் தான். அதுவும் அவர் ஸ்டைலாக தம் அடிக்கும் காட்சிகளுக்கு விசில் பறக்கும்.

எனவே அவரின் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு பா. ம. க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது ரஜினிகாந்த் தன் படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதில்லை.

அண்மையில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இருந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் விடப்பட்டது.

எனவே சர்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்காது என கூறப்படுகீறது.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் தங்கள் தரப்பில் கூறியுள்ளதாவது…

ரஜினி, விஜய் ஆகியோர் செய்தால் மட்டுமே புகை பிடிக்கும் காட்சிகள் எதிர்ப்பு வருகிறது.

ஆனால் அஜித், சிம்பு, தனுஷ் ஆகியோர் செய்தால் அதை யாரும் கண்டுக் கொள்வதே இல்லை என தெரிவித்துள்ளனர்.

Rajini and Vijay fans getting angry on Smoking scenes issue

More Articles
Follows