சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்களில் ரிலீசான ‘டாக்டர்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே.

இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், புகழ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதை பார்த்தோம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்போது நாயகி வேட்டை நடந்து வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Telugu top heroine joins Sivakarthikeyan’s next ?

கமலை மிரட்டும் நட்சத்திரங்கள்.; ‘விக்ரம்’ வில்லன்களை எண்ண கைவிரல்கள் பத்தலையே

கமலை மிரட்டும் நட்சத்திரங்கள்.; ‘விக்ரம்’ வில்லன்களை எண்ண கைவிரல்கள் பத்தலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பான் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் குணச்சித்திர நடிகர் சம்பத் ராம், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் மற்றும் மைமிங் கோகுல்நாத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் விக்ரம் வேதா புகழ் வில்லன் நடிகரான ஹரீஷ் பெராடி என்பவரும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறாராம்.

இவர்கள் அனைவரும் கமல்ஹாசனை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய்சேதுபதியின் உறவினர்களாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Vikram Vedha actor joins Kamal’s Vikram shoot

‘தொரட்டி’ இயக்குநருடன் இணையும் சசிகுமார் & சாம் சிஎஸ்

‘தொரட்டி’ இயக்குநருடன் இணையும் சசிகுமார் & சாம் சிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019 ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தொரட்டி. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட இந்த படத்தை மாரிமுத்து இயக்க ஷமன் மித்ரு நாயகனாக நடித்திருந்தார்.

இப்பட நாயகன் தன் அடுத்த படத்திற்கு தயாரான நிலையில் இந்தாண்டு 2021 ஜீன் மாதம் கொரோனா தொற்றால் காலமானார்.

இந்த நிலையில் தற்போது ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து தன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.

Thoratti director joins with Sasi Kumar

பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையைமத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட புகழ் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 2022 பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியிட எண்ணியிருந்தனர்.

ஆனால் ஏற்கெனவே பொங்கல் சமயத்தில் சில படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அஜித் நடித்துள்ள வலிமை, (ஜனவரி 14 ரிலீஸ்) ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் (ஜனவரி 7 ரிலீஸ்), பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் போன்ற படங்கள் ரெடியாகிவிட்டது.

இந்த நிலையில் 2022 பிப்ரவரி 4ல் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

Etharkkum Thunindhavan locks release date in February

நீதியரசர் சந்துரு உடன் இணைந்து தன்னையே கௌரவப்படுத்திய பார்த்திபன்

நீதியரசர் சந்துரு உடன் இணைந்து தன்னையே கௌரவப்படுத்திய பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வணக்கம் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு…

சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் பிறந்த பிறகு தான் என் வாழ்க்கையில் சுபிட்சம் தொடங்கியது.

89,90 களில் என் பிறந்த நாளின் போது, மிகப்பெரிய விழாவாக நான் கொண்டாட, அன்றைய செய்திதாள்களில், தினத்தாள்களில் என்னை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் ஏராளம்.

நடிகர் சிவகுமார் அவர்கள் என்னிடம் சொன்னார் ‘சில வருடங்களில் இது கொஞ்சம் குறையலாம், குறையும்போது உன் மனம் வருத்தப்டும் வேண்டாமே’ என்றார். அன்றிலிருந்து நிறுத்தி விட்டேன் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களை.

நாம் தினந்தோறும் இறந்து, மறுநாளில் பிறக்கிறோம் அது தான் உண்மை . ஒவ்வொரு உறக்கமும் ஒரு சிறிய மரணம். விடிந்த பின் தான் தெரிகிறது இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறதென்று,அப்படி பல முறை நாம் மடிந்தும் பிறக்கிறோம்.

மரணம் என்பது கொஞ்சம் மானம் போகும்போது கூட நிகழ்கிறது. அப்படி எல்லோர் வாழ்விலும் சில மரணங்கள், எனக்கும் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒரு மரணத்திலிருந்து நான் மீண்டும் உயிர்த்தெழுந்தது குழந்தைகளின் அன்பால். அபி , கீர்த்தி, ராக்கி மூவரும் மீண்டும் ஒரு முறை எனக்கு உயிர்பிச்சை தந்தார்கள்.

அன்றிலிருந்து துவங்கியது மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கை. இவ்வருடம் அக்குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள். அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம்.

அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் போது எனக்கு என்ன தோன்றியதென்றால் அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.

பிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்டநாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய்பீம் படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார்.

இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது. பிரதிபலன் பாராமல் தான் அவர் இந்த காரியங்களெல்லாம் செய்திருக்கிறார்.

அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும் எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் தலைமை கண்டிருக்கிறார். ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக்கொள்வதை போல ஒரு சுயநல விசயாமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன்.

நண்பர் ஓவியர் ஶ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை அவரிடம் கொடுத்து, அவரின் துணைவியாரையும் வரச்சொல்லி, திரு பாரதிராஜா, திரு பாக்யராஜ், பிரபு தேவா, விஜய்சேதுபதி, ரவிவர்மன், இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ரஞ்சித் இப்படி சிலருடன் அந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. திரு சந்துரு அவர்கள் ஒரு இன்ஷ்பிரசேனாக இளைஞர்களுக்கு ‘ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும்,

இந்த வாழ்கையில பணத்த மீறி, புகழ மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை, அகம் மகிழ்ந்து போகுமதில், அப்படிபட்ட அகமகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள திரு சந்துரு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்’.

அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமையவேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக்கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி…

Actor Parthiban celebrated his birthday with former Judge Chandru

குருகுலம் செட் விபத்தில் உயிர்பிழைத்த 5 பேர்.; 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சொல்லப்படாத கதை.!

குருகுலம் செட் விபத்தில் உயிர்பிழைத்த 5 பேர்.; 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சொல்லப்படாத கதை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’
படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து, இப்படத்தை இயக்கி வரும் ஜி.வி.பெருமாள் வரதன், சில வரலாற்று காட்சிகளை படமாக்குவதற்காக செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் சிலவற்றை அமைத்துள்ளார்.

அதில் முக்கியமாக, அக்காலத்து குருகுலம் ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குருகுலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து படக்குழுவினருக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து நிகழும் போது அந்த இடத்தில் படக்குழுவை சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த ஐந்து பேரும் அங்கிருந்து வெளியேறியதால், நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

இது குறித்து கூறிய இயக்குநர்…

“இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருக்கிறது.

குறிப்பாக விபத்து நடக்கும் போது அங்கிருந்த படக்குழுவினர் நுலிழையில் உயிர் தப்பினார்கள். கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

உற்சாகத்தோடு படப்பிடிப்பை தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் இருந்து மீண்டு மீண்டும் படப்பிடிப்பை விரைவில் துவங்குவோம்.” என்றார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும்
கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை
ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.

ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை
நிர்மாணிக்கிறார். நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

பல்லவ மன்னர்களில் முக்கியமானவரான நந்தி வர்மனைப் பற்றி இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை தகவலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gurukulam movie set damaged in recent flood

More Articles
Follows