பிப்ரவரி 5 முதல் ரவிதேஜாவுடன் ஸ்ருதி வரலட்சுமி சமுத்திரகனி இணைந்த ‘க்ராக்’

பிப்ரவரி 5 முதல் ரவிதேஜாவுடன் ஸ்ருதி வரலட்சுமி சமுத்திரகனி இணைந்த ‘க்ராக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

krack telugu film (2)சங்கராந்தி சிறப்பு திரைபடமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த “க்ராக்” தெலுங்கு திரைப்படம் பிப்ரவரி 5 முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜா நடிப்பில், தயாரிப்பாளர் B. மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் “க்ராக்”.

நீண்ட பொதுமுடக்க காலத்திற்கு பிறகு சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.

தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலைஅலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இப்படம்.

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ், கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது.

பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது.

பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக்கோலம் காண வைத்தது இப்படம்.

இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் தாண்டி தமிழ் மலையாளம் மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன், முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டன் சிவா என தமிழக நடிகர்களே அதிகம் நடித்துள்ளனர்.

தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பங்குகொண்டுள்ளனர்.

தமிழகத்திலும் கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்கோரியினை ஏற்ற படக்குழு “க்ராக்” படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய “க்ராக்” பிப்ரவரி 5முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளிவரவுள்ளது…

Telugu hit Krack ‘s Tamil and Malayalam dubbed version to release on Feb 5th

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி மனைவி லதா.? அம்மன் கோயிலில் சௌந்தர்யா சிறப்பு பூஜை

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி மனைவி லதா.? அம்மன் கோயிலில் சௌந்தர்யா சிறப்பு பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் 2020 டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுப்பட போவதில்லை என நீண்ட விளக்கம் அளித்தார்.

இதனால் ரஜினி் ரசிகர்களும் அவரது வருகையை எதிர்பார்த்த தமிழர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரஜினி மகள் சவுந்தர்யா & அவரது கணவர் விசாகன் ஆகியோர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ரஜினிக்காக சிறப்பு தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினி தனது கணவருடன் வந்து வழிபாடு நடத்தினார்.

அப்போது அவர், தனது அம்மா லதா ரஜினி தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தன் அப்பா ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் அனைத்து புது முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டதாம்.

எனவே இன்னும் சில தினங்களில் லதா ரஜினியின் புதிய கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தலைவா… என்ன நடக்குது..??

Latha Rajinikanth to start a new political party ?

soundarya rajinikanth

விக்ரம் பிரபுக்கு போட்டியாக சிவாஜி குடும்பத்திலிருந்தே அடுத்த நடிகர் பராக்..

விக்ரம் பிரபுக்கு போட்டியாக சிவாஜி குடும்பத்திலிருந்தே அடுத்த நடிகர் பராக்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dharshanதமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்றுவரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, அவரை முன்வைத்தே பாடமெடுக்கப்படுகிறது.

அப்படியான நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திலிருந்து தன் தாத்தா வழியில் நடிப்பை கற்று திரையில் அறிமுகமாக காத்திருக்கிறார் தர்ஷன்.

நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் அவர்களின் இரண்டாவது மகன் தான் தர்ஷன். தர்ஷன் தன் தாத்தா போல் சிறுவயது முதலே, கலை ஆர்வம் அதிகம் உள்ள நபர்.

தன் தாத்தா மேல் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் தர்ஷன் நடிப்பை முறையாக் கற்று நடிப்பிற்காக முழுமையாக தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார்.

தனது கல்லூரி காலம் தொடங்கி, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மேடை நாடகங்களில் பங்காற்றிவருகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா-வில் உள்ள பேராசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்றுவருகிறார்.

தர்ஷன் பல்வேறு விதமான நாடக முறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்ண்டுள்ளார்.

சபா நாடகம், தெருகூத்து, வீதி நாடக குழு, நாட்டுபுற நாடகம், தனி நடிப்பு மற்றும் சமூக நாடகம் போன்ற செயல்பாடுகளை மும்பை, புனே மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுதும் பல பகுதிகளில் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தானே நாடக நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தியுள்ளார்.

இந்தியாவில் எந்த ஒரு வாரிசு நடிகரும் செய்யாத சாதனையாக தெருக்கூத்து, வீதி நாடக குழு ஆகியவற்றில் பணிபுரிந்து சாதனை படைத்திருக்கிறார் தர்ஷன்.

வாரணாசி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இவர் நடித்து, இயக்கிய “ராவி பார்” என்ற நாடகம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தன் தாத்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன்னை முழுதாக நடிப்பிற்கு ஒப்புக்கொடுத்து அதன் தாத்பர்யங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்திருக்கும் தர்ஷன் அடுத்ததாக திரை உலகில் நுழைய தயாராகி வருகிறார் .

தர்ஷன் நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர் திலகம் வீட்டிலிருந்து மற்றுமொரு பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவுள்ளது.

ஏற்கெனவே பிரபு மகன் விக்ரம் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர்களது குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dharshan from Sivaji Ganesan family becomes hero

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்.; பதறிப்போன அதிகாரிகளுக்கு பக்கா அட்வைஸ்!

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்.; பதறிப்போன அதிகாரிகளுக்கு பக்கா அட்வைஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை.

முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.

கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.

ஆனால் அருகில் சென்ற காவலர்கள் அந்த மனிதர் யார்? என்று பார்த்து திகைத்துப் போனார்கள். அந்த நபர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது அப்போது தான் தெரியவந்தது.

ஏற்கனவே கடற்கரை சாலையில் லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் அங்கிருந்து அடுத்த நிகழ்ச்சிக்கு நம்ம சென்னை செல்பி மையம் திறப்பதற்கான தூரம் ஒரு கிலோமீட்டர் இருந்தது.

ஏற்கனவே நடந்த நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அமைச்சர் ஜெயக்குமாரின் காரை எடுக்க முடியவில்லை. எனவே வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் தன்னந்தனியாக யாருடைய துணையும் இன்றி நடந்தே வந்தார். இதைப்பார்த்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஏன் நடந்து வரீங்க என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு,”நடக்குறது எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிச்ச விஷயம்.. வேகமா நடக்கும் போது உடலுக்கு நல்லது தெம்பா இருக்கும்.

அதுமட்டுமில்ல வெயிலில் நடந்தா அது இன்னும் நல்லது. அதனால தான் நடந்து வந்தேன்.

எங்க போனாலும் எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் முடிஞ்சவரைக்கும் காரை பயன்படுத்தாமல் நடந்து வர்றது நல்லதுதானே, முடிஞ்சா நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க” என்று கொளுத்தும் வெயிலிலும் கூலாகச் சிரித்தார் அமைச்சர்.

அங்கிருந்த அனைவரும் அமைச்சரின் இந்த செயலைக் கண்டு வியந்து நின்றார்கள். பந்தா இல்லாமல் எல்லா விஷயங்களிலும், செல்லும் இடமெல்லாம் மக்களை தன்பால் ஈர்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான மனிதராகவே வலம் வருகிறார் ஜெயக்குமார் என்று பேசிக்கொண்டனர் அங்கிருந்தவர்கள்.

TN Minister Jayakumar advice to Officers at CM function

மாஸ் என சொல்லப்பட்ட ‘மாஸ்டர்’ படம் லாஸ்..; அமேசான் ரிலீஸ் காரணம் இதுதானா?

மாஸ் என சொல்லப்பட்ட ‘மாஸ்டர்’ படம் லாஸ்..; அமேசான் ரிலீஸ் காரணம் இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterதமிழகமெங்கும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் (ஜனவரி 29-ம் தேதி) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது.

மாஸ்டர் படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சி என அமேசான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.

தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை பார்க்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ்.

இந்த படம் வெளியான 10 நாட்களில் வசூல் 200 கோடி ரூபாயை கடந்து விட்டது என கூறப்படுகிறது.

ஒருவேளை படம் வசூல் வேட்டை செய்வது உண்மை என்றால் 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய என்ன காரணம்?

திரையரங்கு உரிமையாளர்கள் முறையாக வசூல் கணக்கை காட்டாமல் தில்லு முல்லு செய்திருப்பதால் ஏற்பட்ட இழப்பே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

தியேட்டர்களில் (அரசுக்கு தெரியாமல்) முறைகேடாக 100% இருக்கைகள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் திரையரங்கு நிர்வாகத்தினரோ 50% மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறி தயாரிப்பாளருக்கு கணக்கு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் தியேட்டரிலேயே 500, 800, 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்ற நிலையில் தயாரிப்பாளருக்கு சாதாரண டிக்கெட் கட்டணம் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளதாம்.

அதன்படி மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய பங்கு தொகையில் ரூ 50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வரை திரையரங்கு பங்கு தொகை 65 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகிறது.

அமேசானில் ஓடிடி வெளியாவதால் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனவும் தெரிகிறது.

Reason behind Master OTT release quickly

‘பத்து தல’ சிலம்பரசனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்

‘பத்து தல’ சிலம்பரசனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gautham menonசில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் தமிழில் உருவாகி வருகிறது.

ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்

‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட பர்ஸ்ட் லுக் செம வைரலாகி அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட வில்லன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்த கவுதம் மேனன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon plays baddie in STR’s film

More Articles
Follows