தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டான்ஸ் மாஸ்டர், ஆக்டர், டைரக்டர், புரொடியூசர் என பன்முக திறமைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
இவர் இன்று அக்டோபர் 29ஆம் தேதி தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலை காட்டினார்.
பின்னர் இவரே ஹீரோவாகி படங்களில் கதையில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ’முனி’ படம் மிகப்பெரிய பேய் வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து ’காஞ்சனா’ ’காஞ்சனா 2’ காஞ்சனா 3 என அதிரடியாக பல பேய் படங்களை இயக்கி தமிழக ரசிகர்களை பயமுறுத்தினார்.
’காஞ்சனா’ திரைப்படம் 100 கோடி வசூலை குவித்து பெரும் சாதனை படைத்தது.
ரஜினி, கமல், விஜய் அஜித் படங்கள் மட்டுமே ரூ. 100 கோடிகளை எட்டும் நேரத்தில் லாரன்ஸ் படமும் கோடியை வசூலித்தது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியது.
தமிழில் சாதனையை அள்ளிய காஞ்சனா படத்தை ஹிந்தியில் இயக்க சென்றார். அக்சய்குமார் நடித்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
தற்போது ’ருத்ரன்’ ‘அதிகாரம்’ மற்றும் ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் பல குதிரைகளில் சவாரி செய்தாலும் தலைக்கணம் இல்லாத மிக எளிமையான மனிதர். ஒருவருக்கு உதவி என்றால் அடுத்த நொடியே எந்த தாமதம் இன்றி உதவிக்கரம் நீட்டுபவர் இவர்.
இயற்கை பேரிடர் ஏற்படும்போது அரசுக்கும் மக்களுக்கும் நிதியுதவி செய்யும் முதல் நபர் இவரே தான்.
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி அள்ளிக் கொடுத்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
இவர் படங்களிலும் பலருக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
தமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்துக் கொண்டார். தினமும் ஒரு ஏழை குழந்தையின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தன்னால் இயன்ற வரை நிதியுதவி செய்து வருகிறார்.
இவரது அறக்கட்டளையில் அனாதை குழந்தைகளை தங்க வைத்து அவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார்.
தாய் மீது அதிகளவு அன்பு கொண்ட இவர் தாய்க்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். மேலும் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு இந்தியாவிலேயே பெரிய சிலை அமைத்து 15 அடி உயரத்தில் சிலை நிறுவியுள்ளார்.
கடந்த 2018 செப்டம்பரில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இவருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சுக்கள் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தன.
“இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நினைப்பது தாயைத்தான்.
நாங்கள் ராயபுரத்தில் வசித்தபோது எனக்கு 11 வயது. அப்போது நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்.
அப்போது என் அம்மா தன் தோளில் என்னை தூக்கிக் கொண்டே ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வார். பஸ்ஸுக்கு கூட காசு இல்லாத நிலைமையில் இருந்தோம்.
அம்மா இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை.
சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எனக்கு கார் கழுவும் வேலை கொடுத்து முதன்முதலில் ஆதரவு அளித்ததார்.
அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ‘நீ டான்ஸரா சேரு என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்துவிட்டார்.
அதன்பின்னர் சினிமாவில் தன் திறமையால் தனி டான்ஸராகி, பின்னர் மாஸ்டரானார்.
வருடங்கள் செல்ல வெல்ல வளர்ந்து பார்த்தேன் ரசித்தேன் மற்றும் ‘அமர்க்களம்’ படங்கள் மூலம் நடிகரானார்.
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ‘தர்மம் தலைகாக்கும்’என்ற பாடலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘மரத்தை வெச்சவன் தண்ணீ ஊத்துவான்’ என்ற பாடலை இவரின் தாரக மந்திரமாக கொண்டு ஏழைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி வருகிறார்.
இந்த பாடல்கள்தான் அதற்கு காரணம் என அவரே அந்த விழா மேடையில் சொல்லியிருக்கிறர்.
ஒரு சராசரி மனிதனாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி அவர்களுக்கே தர்கிறேன் என எளிமையாக சொல்கிறார் இந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்” ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தன் வாழ்வில் அவரின் எண்ணத்திற்கேற்ப பல வெற்றிகளை குவித்து பல்லாண்டு வாழ FILMISTREET சார்பாக எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Team filmistreet wishes to multi talented Raghava Lawrence