தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்க இன்று சென்னை வந்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.
அதன்படி சற்றுமுன் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
வருகிற ஜனவரி 23ஆம் தேதி இதற்கான சட்டம் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
எனவே இன்று இரவு மதுரைக்கு சென்று நாளை ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கவிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
மேலும் ஓரிரு தினங்களில் மற்ற மாவட்டங்களுக்கு மற்ற அமைச்சர்கள் நேரில் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பார்கள் என தெரிய வந்துள்ளது.
குறிப்பு : இந்த சட்டம் குறைந்தபட்சம் 6 மாத காலம் அமலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
Tamil Nadu Governor Vidyasagar Rao Issued Ordinance on Jallikattu