மச்சானை இழந்த சில தினங்களில் அப்பாவையும் இழந்த நகைச்சுவை நடிகர்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான பால சரவணன் தன் தந்தை ரங்கநாதன் கொரோனா தொற்றால் இழந்துள்ளார்.

இவரது தந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மையில் தான் தன் தங்கையின் கணவரையும் (32 வயது) கொரோனா தொற்றுக்கு பறி கொடுத்தார் நடிகர் பாலசரவணன்.

அப்போதே கொரோனாவை அலட்சியமாக கருத வேண்டாம் என நடிகர் பாலசரவணன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil comedy actor dies due to corona

Overall Rating : Not available

Latest Post