சனிக்கிழமைன்னாலே பார்ட்டிதான்…; சிவகார்த்திகேயன் தந்த பிரைவேட் பார்ட்டி

சனிக்கிழமைன்னாலே பார்ட்டிதான்…; சிவகார்த்திகேயன் தந்த பிரைவேட் பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் இணைந்துள்ள படம் ’டான்’.

இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார். சிவகார்த்திகேயனும் கோ புரொடியூசராக இணைந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.

இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

எனவே இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே ஜலபுல ஜங், பே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் 3வது பாடலான பிரைவேட் பார்ட்டி பாடலை படக்குழுவினர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ’சனிக்கிழமை என்றாலே பார்ட்டிதான், எனவே சனிக்கிழமை டான்’ படத்தின் ’பிரைவேட் பார்ட்டி’ என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று சற்றுமுன் அந்த பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Private party song from Sivakarthikeyan’s Don is released

அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி..; விக்னேஷ்சிவன் விளக்கம்

அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி..; விக்னேஷ்சிவன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படம் ஏப்ரல் 28ல் வெளியானது.

இதனையடுத்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள ’அஜித் 62’ படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வந்தன.

ஏற்கெனவே ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கும் ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கும் வில்லனாக நடித்திருத்தார் விஜய்சேதுபதி.

எனவே முன்னணி நடிகரான அஜித்துக்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளதாவது… ‘என்னுடைய ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன், அது நடக்கவே நடக்காது’ என தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ மற்றும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh Shivan drops a major update on AK 62

ஹிந்தியை எதிர்த்து பொய் வேஷமிடும் பிரபலங்கள்..; மோகன் ஜீ சாடல்

ஹிந்தியை எதிர்த்து பொய் வேஷமிடும் பிரபலங்கள்..; மோகன் ஜீ சாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிச்சர்ட் நடித்த ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய இரு படங்களை இயக்கியவர் மோகன்ஜி.

இவர் அடுத்து ‘பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் இயக்குனர் செல்வராகவன், நடிகர் நட்டி நடராஜன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஹிந்தி தேசிய மொழி என்ற சர்ச்சை குறித்தும் அதில் பிரபலங்கள் போடும் இரட்டை வேஷம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இயக்குனர் மோகன்ஜி கூறியதாவது… ‛‛ஹிந்தியை படிக்க மாட்டோம். ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம். ஹிந்தி புடிக்காது. ஆனால் ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம்.

ஹிந்தி பேச பிடிக்காது. ஆனால் தமிழ் படங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து லாபம் அடைவோம். தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.

இப்படி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை. அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும். அவர்களுக்கு நாம் ஆதரவு தரலாம்” என ஓப்பனா தெரிவித்துள்ளார் மோகன்ஜி.

Mohan g criticized celebritities in hindi language issue

விஜய்-அஜித்தை இணைத்து ஒரு படம்.. நாகசைதன்யாவுடன் ஒரு படம்.; வெங்கட்பிரபுவின் சூப்பர் ப்ளான்..

விஜய்-அஜித்தை இணைத்து ஒரு படம்.. நாகசைதன்யாவுடன் ஒரு படம்.; வெங்கட்பிரபுவின் சூப்பர் ப்ளான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த மாநாடு மற்றும் அசோக் செல்வன் நடித்த மன்மதலீலை ஆகிய இரு வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இவர் விரைவில் நாகார்ஜீனா மகன் நாகசைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு ஒரு நிகழ்ச்சயில் கலந்துக் கொண்டபோது அவரிடம் ‘மங்காத்தா-2’ படம் இயக்குவது குறித்து கேட்கப்பட்டுள்ளது.

மங்காத்தா 2 படத்தின் கதை ரெடியாக உள்ளது. இதில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் இணைத்து இயக்க ஆசைப்படுகிறாராம்.

அவர்கள் இணைந்து நடிக்க ஓகே சொன்னால் விரைவில் மங்காத்தா 2 படம் உருவாகும் எனவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

Read also – அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்

Venkat Prabhu wants to direct both Ajith and Vijay in a single film

மம்மூட்டியின் ‘சிபிஐ-5’ மே 1ல் ரிலீஸ்..; 35 ஆண்டுகளில் 5 பாகங்கள் ஒரு பார்வை..

மம்மூட்டியின் ‘சிபிஐ-5’ மே 1ல் ரிலீஸ்..; 35 ஆண்டுகளில் 5 பாகங்கள் ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட்டில் சில படங்கள் பல பாகங்களாக வந்துள்ளன. இந்திய சினிமாவில் ஓரிரு படங்களே 3 பாகங்களாக வந்துள்ளன.

ஆனால் மலையாளத்தில் ஒரு சினிமா 4 பாகங்களாக வந்துள்ளன. தற்போது அதன் 5ஆம் பாகம் ரிலீசாகிறது. அதுதான் ‘CBI 5 THE BRAIN’

நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ல் இந்த படம் ரிலீசாகிறது.

மலையாளத்தின் சிறந்த சீக்குவல் சினிமா என சிபிஐ படங்களை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.

இதில் மம்மூட்டி சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மம்மூட்டி செய்யும் விசாரணை முறை பாணி அப்போதே பாப்புலர் ஆனது.

1988ஆம் ஆண்டில்தான் இதன் முதல் பாகம் ‘சிபிஐ டைரிக் குறிப்பு’ என்ற பெயரில் வெளியானது.

திரைக்கதை ஆசிரியர் எஸ்.என்.சுவாமி கதை, திரைக்கதை எழுத இப்படத்தை கே.மது இயக்கியிருந்தார்.

பிரபலமாக இருந்த சிபிஐ வழக்கு விசாரணைகளை மையப்படுத்தியே இதன் பாகங்கள் உருவானது.

இதில் மம்மூட்டி உடன் முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, லிஸ்சி, சுகுமாரன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெகதி ஸ்ரீகுமாரும் முகேஷும் உதவி விசாரணை அதிகாரிகளாக நடித்திருப்பார்கள்.

இதன் இரண்டாம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரில் 1989-ல் வெளியானது. ஒரு நடிகையின் மரணத்தை விசாரிப்பதாக இந்த படம் இருக்கும்.

இதில் நடிகை பார்வதி ஜெயராம் நடித்திருந்தார்.

இந்தப் படமும் வெற்றி பெறவே இதன் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தன.

ஒவ்வொரு படத்திலும் களங்கள் வெவ்வேறாக இருக்கும்.

இதன் பின்னர் 2004-ல் ‘சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரில் 3ம் பாகம் வெளியானது. சிபிஐ கூட்டணியுடன் இதில் நவ்யா நாயர் நடித்திருந்தார்.

இதனையடுத்து இதன் 4ஆம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ 2005ல் வெளியானது.

இதில் சம்ருதா சுனில், கோபிகா நடித்திருந்தனர்.

இந்த சிபிஐ பாகங்கள் அனைத்தையும் கே மது இயக்கியிருந்தார்.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இதன் சிபிஐ 5 பாகம் வெளியாகிறது.

விபத்து ஏற்பட்டு நினைவில்லாமல் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருந்த கெஜதி ஸ்ரீகுமார் இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார்.

நாளை மே 1ல் ரிலீசாகவுள்ள CBI 5 THE BRAIN படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

CBI 5 The Brain OPENS FROM MAY 1 WORLDWIDE

கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டில் புது ரூட் போடும் அஜித்..; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மங்காத்தா முதல் வலிமை வரை.. நரைத்த தலை முடி, நரைத்த தாடி என வலம் வருகிறார் நடிகர் அஜித்.

இதனால் அவரது படங்களிலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எனவே நாயகிகளுக்கும் பெரிதாக வேலை இல்லாமல் போய்விடுகிறது.

வேதாளம், வீரம் படங்களில் ஆக்சன் காட்சிகளே பலமாக அமைந்தன.

இடையில் வந்த விஸ்வாசம் படத்தில் நாயகியை விட தந்தை மகள் பாசமே பெரிதாக பேசப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தில் பெயரளவில் மட்டுமே நாயகி இருந்தார். வலிமை படத்தில் அது கூட இல்லை.

தற்போது அஜித் 50 வயதை நெருங்கிவிட்டார். இனி அவர் இளம் நாயகர்கள் போல நடிக்க விரும்பவில்லையாம். அதன்படி நாயகியுடன் ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டாம் என்கிறாராம்.

ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட எவ்வளவு பெரிய சீனியர் நடிகர்களாக இருந்தாலும் நாயகியுடன் சின்ன சின்ன ரொமான்ஸ் மற்றும் டூயட் வேண்டும் என்பார்கள்.

அப்படியிருக்கையில் டூயட் வேண்டாம் என அஜித் புது ரூட் போட விரும்புகிறாரோ என்னவோ..? அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் டீம்..; ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் வினோத்

Will fans accept Ajith’s new decision ?

More Articles
Follows