பிரபல நடிகையின் கணவருடன் இணைய தமன்னா போடும் ‘ப்ளான்’

பிரபல நடிகையின் கணவருடன் இணைய தமன்னா போடும் ‘ப்ளான்’

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.

இவரது கைவசம் தற்போது தமிழ் படங்கள் பெரிதாக இல்லை.

எனவே வெப் தொடர்களிலும் நடிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ரிலீசான வெப்தொடர் ’நவம்பர் ஸ்டோரி’ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமன்னா நடிக்கவுள்ள அடுத்த வெப்தொடரான ‘பிளான் ஏ பிளான் பி’ அப்டேட் கிடைத்துள்ளது.

இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திக்காக தயாரிக்கப்படுகிறது.

இதில் நடிகை ஜெனிலியாவின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.

தமன்னா நாயகியாக நடிக்க அந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

Tamannaah in Plan A Plan B web series update is here

புதுச்சேரி பகுதிகளில் ஒதுங்கியது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’

புதுச்சேரி பகுதிகளில் ஒதுங்கியது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.

இவர் தற்போது கோலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா உடன் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கினாலும் கொரோனா ஊரடங்கால் நடிகர்களின் கால்ஷீட் தேதிகள் மாறியது. எனவே படப்பிடிப்பை தொடங்கவில்லை.

தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது படக்குழு.

அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது.

Kaathu Vaakula rendu kadhal movie shoot updates

விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

கடந்த 2020 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவ வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் பின்னர் மீண்டும் ஷூட்டிங் சென்ற நடிகர் விஜய் ஒரு பஸ் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதை பிப்ரவரி 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த செல்ஃபி ஒரு ஆண்டை கடந்த போது அதனை கொண்டாடும் வகையில் #1YearOfMasterSelfie ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் 2021 இந்தாண்டில் செய்தனர்.

இந்த நிலையில் மம்மூட்டி ரசிகர்களும் இவர் உடற்பயிற்சி செய்த போது எடுத்த செல்ஃபியை #1YearOfIconicMegastarSelfie என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

1 Year Of @mammukka’s Viral Workout Selfie that Shock the Internet Like Never Before !!

The man who constantly inspires ❤️

#1YearOfIconicMegastarSelfie

#Mammootty #BheeshmaParvam https://t.co/DvQ0Yyuqvt

Mammootty fans follows Vijay fans way

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

நயன்தாராவுடன் இணைந்து அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது.

இதில் நாயகியாக நடித்துள்ளதாலும் தன் சொந்த படம் என்பதாலும் இப்படம் தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நயன்தாரா.

அடுத்த தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அந்த புரோமோ நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா அவரின் பட நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொள்கிறாரே என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இவர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நேற்று விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பானது.

அப்போது..” தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது” என்றார்.

எனவே திருமணம் எப்போது? என தொகுப்பாளர் கேட்டார்

“விரைவில் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன்.

ஆனால், எல்லோருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன்.” எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Actress Nayanthara talks about her marriage

விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

விஜய் திரையில் நடித்து காட்டியதை நிஜத்தில் செய்து அசத்திய ரோபோ சங்கர்

‘மாஸ்டர்’ படத்தில் சீர்திருத்த பள்ளி மாணவர்களுக்காக விஜய் ஆடி பாடிக்கொண்டே குட்டி ஸ்டோரி சொல்லி நிறைய அட்வைஸ் செய்வார்.

அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது.

விஜய் படத்திற்காக நடித்து காட்டியதை தற்போது ரோபோ சங்கர் நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார். இனி தொடர்ச்சியாக செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர். காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர்.

வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் , வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என ரோபோ சங்கரின் வழி எப்போதும் தனி வழி தான்.

கரோனா சூழலால் உலகமே மன உளைச்சலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் சிறைக்கைதிகளாக இருக்கும் மனிதர்களுக்காகவும் , சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுக்காகவும் முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ளார்.

75 வது ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்தப்பணியைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப்பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார்.

தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறப்பு நாட்களில் சிறைச் சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார்.

திரையில் வந்தோமா கல்லாவை நிரப்பினோமா என்று செல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறைச்சாலை கைதிகளுக்காக களத்தில் இறங்கிய ரோபோ சங்கரை சக நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Netizens praises Actor Robo Shankar’s stress relief activities

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் கங்கை அமரன்.; அருண் விஜய் – ஹரியுடன் கூட்டணி

பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.

இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பத்தில், 1979ல் புதிய வார்ப்புகள் , 80ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார் கங்கைஅமரன்.

அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார்.

சூப்பர் ஹிட் படமான கோழிகூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார்.

தொடர்ந்து, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார்.

அதேபோல், 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே, சோழம் விதக்கையிலே.. இந்த பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் .

கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ.. பாடல், முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லு சோறு .. நிழல்கள்- பூங்கதவே.. போற்ற சுமார் 35 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை28, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ஹிட் தான்.

2013 க்கு பிறகு மீண்டும், பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். காரைக்குடியில் அருண்விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.

காலையில் கதை காட்சிகளும்.. இரவில் சண்டை காட்சிகளுமாக இரவு பகலாக அருண்குமார் நடித்து வருகிறார்.

அனல் அரசு சண்டை காட்சி அமைத்தார்.
தூத்துக்குடி, காரைக்குடியெய் தொடர்ந்து ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Music: GV.Prakash
Cinematography: Gopinath
Editing: Antony
Stunt: Anl Arasu
Art: Micheal
PRO: Johnson
Co Producer: G.Arun Kumar
Production: Drumsticks Productions
Produced by: Vedikaranpatti S.Sakthivel .

Gangai Amaren joins part of Arun Vijay – Director Hari movie

More Articles
Follows