SJ.சூர்யா – யாஷிகா நடித்த படத்தை பார்த்து தன் ‘கடமையை செய்’-த டி. ராஜேந்தர்

SJ.சூர்யா – யாஷிகா நடித்த படத்தை பார்த்து தன் ‘கடமையை செய்’-த டி. ராஜேந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்துடன் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் “கடமையை செய்”

இதில் S.J சூர்யா , யாஷிகா ஆனந்த் , மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் , சார்லஸ் வினோத் , சேஷு, ராஜா சிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கணேஷ் என்டர்டைன்மென்ட் & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக T.R.ரமேஷ் & ஜாகிர் உசேன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை -அருண்ராஜ்,.

படத்தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B, ஒளிப்பதிவு -வினோத் ரத்தினசாமி .. எழுத்து & இயக்கம்- வேங்கட் ராகவன்.

சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த டி ராஜேந்தர் மிகவும் ரசித்து, நெகிழ்ந்து படக்குழுவினரை மனதார பாராட்டிய தோடு இல்லாமல் இந்தப் படத்தை உலகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்.

இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்க கூடிய மிக ஜனரஞ்சகமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்ததோடு, இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு ‘ U’ தர சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரைவில் திரை அரங்கில் கண்டுகளித்து கொண்டாடக் கூடிய கமர்ஷியல் சக்சஸ் ஆக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசிய படுத்தி உள்ளதாகவும் இது நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும், அளவிற்கு அனைவரும் தங்கள் கடமையை செய்துள்ளதாக இயக்குனர் வேங்கட்ராகவன் தெரிவித்துள்ளார்.

T Rajendar to release SJ Surya’s Kadamaiyai sei movie worldwide

ஒரு நேர்த்தியான நடிகன் சினிமாவிற்கு கிடைத்து விட்டார்.; ஆர்.கே சுரேஷை பாராட்டிய சீனுராமசாமி

ஒரு நேர்த்தியான நடிகன் சினிமாவிற்கு கிடைத்து விட்டார்.; ஆர்.கே சுரேஷை பாராட்டிய சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது.

படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது.

ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும்.

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,..

“தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முழைக்க செய்யும் முதல் முயற்சி தான் இந்த சினிமா, அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர் கே சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, இந்த படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே அனைவரும் இந்த படத்தை பார்க்கவேண்டும்.

ஆர் கே சுரேஷ்க்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் ஆர் வி உதயகும்மார் பேசுகையில்….

“விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. தலைவரிடம் சொன்னேன், இன்று நாம் அனைவரும் பார்த்துவிட்டோம், என்னைபோலவே உங்களுக்கம் பாதிப்பை உண்டாக்கியதில் மகிழ்ச்சி.

அதன் பிறகு சிறப்பு கண்ணோட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில்….

” விசித்திரன் படத்தின் மூலமாக ஒரு நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

தொடர்ந்து இதுபோல நடிப்புக்கு சவால் விடும் படங்களை ஆர் கே சுரேஷ் நடிக்க வேண்டும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

அதன்பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை முறையே பதிவு செய்தனர். அதை படக்குழு விளம்பரத்துக்காக எந்தவித தொகுப்பும் செய்யாமல், அதை அப்படியே இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.

ஒரு வளர்ந்தவரும் நடிகனின் படத்தை பார்த்து இயக்குனர் சங்கம் வெகுவாக சிலாய்த்து பாராட்டியது இதுவே முதல் முறை. அதன்பிறகு படத்தின் கதாநாயகனும் தனது Studio 9 நிறுவனம் மூலம் உலகெங்கும் “விசித்திரன்” படத்தை வெளியிடும் ஆர் கே சுரேஷ் நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

Seenu Ramasamy praises RK Suresh

நான் கற்பனை கூட செய்து பார்க்கல..; ‘பொன்னி’ பற்றி கீர்த்தி சுரேஷ்

நான் கற்பனை கூட செய்து பார்க்கல..; ‘பொன்னி’ பற்றி கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக ‘சாணிக்காயிதம்‘ திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவனுடன் திரையை பகிர்ந்து கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் ‘தலைமுறை தலைமுறையாக, அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கி தவிக்கும் ‘பொன்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இந்த பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் கீர்த்தி ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பது பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்.

இந்த கதாபாத்திரத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த முன் தயாரிப்புகள் பற்றி பேசுகையில்,…

“முன்பு இனிமையாகவும், வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த, நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அதுபோக இந்த கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் என கூறினார்.

முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து கொண்டு, அந்த மேக்கப்பை போட்டுக்கொண்டு செட்டுக்கு சென்றதும் மடடோர் வேனில் ஏறி நின்று அருண் மற்றும் செல்வா சாரை நான் பார்த்த நிமிடம் நான் கதாபாத்திரத்திற்கு ரெடியாகி விட்டேன்.

இவ்வளவு ஆழமான , அழுத்தமான ஒரு படத்தில் நான் இருப்பேன் என்பதை நான் கற்பனை செய்து பார்த்ததே இல்லை, ஆரம்பத்தில் இந்த படம் கடினமானதாக இருந்தது. ஆனால் கதை முன்னேறிச் செல்ல செல்ல எனக்கு பொன்னி கேரக்டரில் நடிப்பது எளிதாகி விட்டது.

என்னை மேம்படுத்துவதற்கும் பரிசோதனை செய்வதற்கும் முழு சுதந்திரம் எனக்கு கிடைத்தது.இப்படம் ஒரு மிகச்சிறந்த அனுபவம்” என்றார் கீர்த்தி.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம், உலகம் முழுவதும் மே 6 அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இந்த படம் தெலுங்கில் ‘சின்னி’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘சாணிக்காயிதம்’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.

“I had never imagined myself in such an intense film and initially the task seemed daunting” shares, Keerthy Suresh, about her character in Saani Kaayidham

நச்-ன்னு நாலு நாயகிகள் இணைந்த ‘கன்னித்தீவு’ பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

நச்-ன்னு நாலு நாயகிகள் இணைந்த ‘கன்னித்தீவு’ பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான்கு பெண்களை மைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை கிருத்திகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான போராடி வா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Here it is #PORAADIVAA First Single from #Kannitheevu Out now

கவிஞர் வைரமுத்து வரிகளில் ‘தடை உடை’-க்க வரும் சிம்ஹா

கவிஞர் வைரமுத்து வரிகளில் ‘தடை உடை’-க்க வரும் சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’.

இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் ‘தடை உடை’ படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்ஹா கதையின் நாயகனாக தயாரித்து நடிப்பதாலும், படத்தின் தலைப்பு ‘தடை உடை’ என எளிய மக்களையும் கவரும் வகையில் அமைந்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு, தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

Actor Simhas next titled Thadai Udai

பிரபுதேவா நடன அமைப்பில் இணைந்து ஆட்டம் போடும் சிரஞ்சீவி- சல்மான்கான்

பிரபுதேவா நடன அமைப்பில் இணைந்து ஆட்டம் போடும் சிரஞ்சீவி- சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘காட்பாதர்‘.

இப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார்.

இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது…

” அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.

திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என பதிவிட்டு இருக்கிறார்.

அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘காட்பாதர்’ படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் பணியாற்றிய கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் கலை இயக்கப் பணிகளை கவனித்து வருகிறார்.

‘காட்பாதர்’ திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

திரைக்கதை & இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் : ஆர்.‌பி. சவுத்ரி & என். வி. பிரசாத்
வழங்குபவர் : கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனங்கள்: கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்.
இசை : எஸ். எஸ். தமன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
கலை இயக்கம் : சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு மேற்பார்வை : வகதா அப்பாராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Prabhu Deva to Choreograph For Chiranjeevi and Salman Khan

More Articles
Follows