ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

ரஜினி வந்தா நல்லாயிருக்கும்..; காத்திருக்கும் சைரா படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள படம் சைரா.

சுதந்திரப் போராட்ட வீரரான சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சைரா-வாக சிரஞ்சீவி நடித்துள்ளார்.

இவருடன் நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ. 250 கோடியாகும்.

அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜட் படம் என்பதால் தெலுங்கை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியிலும் வெளியிட உள்ளனர்.

எனவே தமிழ் பதிப்பின் அறிமுக விழாவை சென்னையிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டால் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என படக்குழு காத்திருக்கிறதாம்.

மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

மாநாடு படத்திலிருந்து நீக்கியதால் 120 கோடியில் சிம்புவின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என மாநாடு படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

இது அரசியல் படம் என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளிலும் நடைபெற்றது.

ஆனால் சிம்பு செய்த பிரச்சினைகளால் அவரை படத்திலிருந்து நீக்குவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் சுரேஷ் காமாட்சி.

மேலும் புதிய ஹீரோ ஒருவர் மாநாடு படத்தில் நடிப்பார் என கூறினார்.

இது குறித்து சிம்பு எதையும் தெரிவிக்கவில்லை,

இந்த நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பாக ரூ. 120 கோடியில் புதிய படத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்திற்கு மகா மாநாடு எனத் தலைப்பு வைத்துள்ளதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி போல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அர்ஜூன் – கலைப்புலி S தாணு

சிவாஜி போல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அர்ஜூன் – கலைப்புலி S தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை
” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது ‘கனல் கண்ணன்’. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது , கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்ப்பையும் இப்படம் பெற்றுள்ளது . தமிழில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .

இயக்குனர் நாகன்னா பேசியவை ” படம் முனிரத்னா அவர்களின் மூலம் எடுக்கப்பட்டது , அந்த வகையில் நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறோம். 3டி படம் எடுக்க காரணமும் முனிரத்னா அவர்கள்தான் . இந்தப் படத்தில் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் காண்பிப்பதற்காக அவர் 35 கிலோ எடையை வைத்து நடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு நடிகர்களின் மேல் காயம் விழும் அளவிற்கு நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் கர்ணன் துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி”.இவ்வாறு அவர் பேசினார் .

கலைப்புலி s தாணு அவர்கள் பேசியவை , “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன்.இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது .காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் ‘கர்ணன்’ தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குனர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் ” இவ்வாறு அவர் பேசினார் .

நடிகர் தர்ஷன் பேசியவை , ” நான் சென்னையில் உள்ள அடையாரில்தான் படித்தேன், நான் லைட் பாய் ஆக தான் வேலைக்கு சேர்ந்தேன். மைதலாஜிகள் படத்தினை தைரியமாக தயாரிப்பாளர் கொண்டு வந்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும்.அந்த வகையில் நான் இப்படத்தை தேர்வு செய்தேன் .இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னா தான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம் .இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவர்கள், அவரின் நடிப்பும் திறமையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 3டி 2டி என இரண்டு முறை நடித்து மற்றும் டப்பிங் செய்துள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார் .

நடிகர் அர்ஜூன் பேசியவை , “இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார் இந்த படத்தில் . அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது .இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்” இவ்வாறு அவர் பேசினார் .

சண்டைப்பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் பேசியவை ” கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை காட்சிகளின் இறுதியில் படம் நாங்கள் பஞ்சபூதங்கள் மையமாக வைத்து எடுத்தோம் . ஆகையால் ஆரம்பம் முதலே பீமனிற்கு பூமி பலம் பெற்றவர் போல் காண்பித்து எடுக்கப்பட்டது. அதே போல், அர்ஜூன் அவர்கள் இந்தப் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார். படத்தில் வாய்ப்பளித்த முனிரத்னா, நாகன்னா மற்றும் தாணு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ” இவ்வாறு அவர் பேசினார் .

படத்தொகுப்பாளர் ஹர்ஷா பேசியவை , ” டப்பிங் முன்பு இந்தப் படத்தினை பார்த்தபோதே அருமையான இந்த படைப்பினை பார்த்து வியந்தோம் . படம் எடிட்டிங் செய்த பின்பும் இதே தான் எண்ணிணோம். இந்தப் படம் தாணு அவர்கள் மூலம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை தெரிந்த பின் எங்களுக்கு படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது” இவ்வாறு அவர் பேசினார் .

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ்,திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது .

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் சூட்டிங் வைத்து வாரவாரம் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத் தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவது தான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப்படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் எடிட்டிர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பாடலாசிரியர் யுகபாரதி அண்ணனுக்கும் நன்றி. பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது’ என்றார்.

வரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.

4 படங்களில் 3 தோல்வியை கொடுத்த நயன்தாரா; அடுத்தது என்ன?

4 படங்களில் 3 தோல்வியை கொடுத்த நயன்தாரா; அடுத்தது என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharas 3 failure movies in recent timesஎந்த நடிகர் படம் என்றாலும் எந்த வேடம் என்றாலும் தன் கேரக்டரை சரியாக செய்து பேர் வாங்குபவர் நயன்தாரா.

இதனால் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே அதற்கு தகுந்த மாதிரி இவரும் தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றி தற்போது ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை வாங்குகிறார்.

ஆனால் இந்தாண்டில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மட்டுமே வெற்றியை பெற்றது.

அதன்பின்னர் வெளியான ‘ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் படுதோல்வியை அடைந்துள்ளன.

தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களை பெரிதும் நம்பியிருக்கிறார் நயன்தாரா.

இனிவரும் படங்களில் சம்பளத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Nayantharas 3 failure movies in recent times

‘நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்து தல-ய பாராட்டிய தலைவர்

‘நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்து தல-ய பாராட்டிய தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth praises Ajith and Nerkonda Paarvai teamவினோத் இயக்கத்தில் அஜித் வக்கீலாக நடித்த ‛நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.

போனிகபூர் தயாரித்திருந்த இப்படத்தில் வித்யாபாலன், ஸ்ரத்தா, அபிராமி, ஆதிக், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்து அஜித்தை தொடர்பு கொண்டு பாராட்டினாராம்.

Rajinikanth praises Ajith and Nerkonda Paarvai team

More Articles
Follows