தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.
இவருக்கு சினிமாவை தாண்டியும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் கல்விச் சேவை மனப்பான்மை.
சூர்யாவை தொடர்ந்து அவரது ரசிகர்களும் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவ்வப்போது செய்து வருவகின்றனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலறிந்த நடிகர் சூர்யா சென்னையில் இருந்து கார் மூலம் நாமக்கல் சென்றுள்ளார்.
இதன்பின்னர் நாமக்கலில் உள்ள ஜெகதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.
ஜெகதீஷின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த சூர்யா, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ஜெகதீசனின் மனைவி ராதிகாவிடம்..
குழந்தைகளுக்கான படிப்புச் செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் கேட்கும்படி சொன்னாராம்.
மேலும் வாகனங்களில் செல்லு போது பாதுகாப்பாக செல்லுமாறு தனது ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Surya to bear the study expenses of the children of the deceased fan;