பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க நலனுக்காக முதல்வரிடம் ஜோதிகா சூர்யா நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது.

இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது.

இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார்.

திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார்.

இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Surya and Jyotika donate Rs 1 crore to Irular Educational Trust

சமந்தாவை பாலிவுட்டில் நாயகியாக்கும் தயாரிப்பாளர் டாப்சி

சமந்தாவை பாலிவுட்டில் நாயகியாக்கும் தயாரிப்பாளர் டாப்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் உடன் ‘ஆடுகளம்’, அஜித்துடன் ‘ஆரம்பம்’, லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா-2’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டாப்சி.

இவரே கதையின் நாயகியாக நடித்த கேம் ஓவர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் அனபெல் சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் நெகட்டிவ் விமர்சனங்கால் படு தோல்வியை சந்தித்தது.

தற்போது தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிசியான நடிகையாக மாறிவிட்டார் டாப்சி.

இவர் அண்மையில் அவுட்சைடர் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த படத்தில் சமந்தாவை நாயகியாக்கி நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் டாப்சி.

இதன் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாவார்.

ஏற்கெனவே ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றவர் சமந்தா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Taapsee turns producer in this film?

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தரும் டைரக்டர்

கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தரும் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, மலையாள நடிகர்கள் பகத் பாசில், நரேன், காளிதாஸ், மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிரூத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்து வைக்க படக்குழு தயாராகி வருகிறதாம்.

அதாவது விக்ரம் படத்தின் டீசர் அல்லது போஸ்டர் அல்லது க்ளிம்ஸ் இதில் ஏதாவது ஒன்று வெளியாகலாம் என தெரிய வந்துள்ளது.

Kamal Haasan’s birthday treat to his fans

புனீத் ராஜ்குமார் திடீர் மரணம்..; லைவ் டெக்னாலஜியில் அவரின் கடைசி படம்

புனீத் ராஜ்குமார் திடீர் மரணம்..; லைவ் டெக்னாலஜியில் அவரின் கடைசி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ல் திடீரென மரணம் அடைந்தார்.

இதனால் அவர் நடித்த படங்களும் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களும் அப்படியே நிற்கின்றன.

பவன்குமார் இயக்கத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க ஒப்புக் கொண்ட படமான ‘த்வித்வா’ படம் கைவிடப்படும் என தெரிய வந்துள்ளது.

புனிதி கடைசியாக நடித்த படம் சேத்தன் குமார் இயக்கியிருந்த ‘ஜேம்ஸ்’ என்ற திரைப்படம் தான்.

இதில் நாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இதன் டப்பிங் பணிகள் மீதம் உள்ளது. புனித் டப்பிங் பேசுவதற்குள் இறந்துவிட்டார்.

எனவே, அவர் காட்சிகள் படமாக்கப்படும்போது அவர் பேசிய வசனங்களை அப்படியே லைவ்வாக பயன்படுத்த உள்ளார்களாம்.

இதற்காக ஒரு புதிய டெக்னாலஜிய பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Puneeth Rajkumar’s last film James movie updates

என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இதுதான்..; நெகிழ்ச்சியில் வாணி போஜன்

என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு இதுதான்..; நெகிழ்ச்சியில் வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

இந்த வருடம் பல குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இங்கு நடந்த இந்நிகழ்வில் நடிகை வாணி போஜன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியபோது…

“இன்று இந்த குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். மேலும் “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

Actress Vani Bhojan talks about her unforgettable moment in life

ரஜினி பட பிஸினஸ்.. உதயநிதியுடன் மீட்டிங்.. VFF என்பது விஷால் பிலிம் பேக்டரி அல்ல.. – விஷால் ஓபன் டாக்

ரஜினி பட பிஸினஸ்.. உதயநிதியுடன் மீட்டிங்.. VFF என்பது விஷால் பிலிம் பேக்டரி அல்ல.. – விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம் ‘எனிமி’.

விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.

படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருந்த நடிகர் விஷாலிடம்

உரையாடியதிலிருந்து …

நீங்கள் இருவரும் எப்படி எனிமி ஆகினீர்கள்?

நான் தான் ஆர்யாவை எனிமி ஆக்கினேன். முதலில் ஆனந்த் சங்கர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் தலைப்பு வைக்கபடவில்லை. கதை கேட்டவுடன் நான் தான் இந்த பாத்திரத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன்.

நாங்கள் ஏற்கனவே இரும்புதிரை படத்தில், அர்ஜூன் சார் கதாபாத்திரத்திற்கு நடிக்க ஆர்யாவை தான் அணுகினோம். ஆனால் ஆர்யா அப்போது அந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்யும் சூழ்நிலையில் இல்லை. எப்பொழுதும் வில்லன் கதாபாத்திரம் புத்திசாலிதனமாகவும், வலுவானதாகவும் இருக்கும் பட்சத்தில் படத்தில் ஹீரோ கதாபாத்திரமும் வலுவானதாக மாறும். இரும்புதிரை, திமிரு போன்று அமையும்.

நான் இதை சொல்லும் போது, ஆனந்த் அதிர்ச்சியடைந்தார். நீங்கள் இன்னொரு ஹீரோவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை என ஆனந்த் கூறினார். அவர் மீண்டும் திரைக்கதை வேலை செய்து, இறுதி வடிவத்தை கூறும் போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்படும்.

அப்புறம் தான் எனிமி தலைப்பு வைத்தோம். இதை விட சிறந்த டைட்டில் இல்லையென்று முடிவு செய்தோம்.

ஆர்யா உங்களுடைய சிறந்த நண்பன் இந்த படத்தில் எனிமியாக எப்படி நடித்தார்?

ஆர்யா எதற்கு சர்பட்டா பண்ணான் என இப்போது தான் புரிந்தது. படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அவர் என்னை அடிக்க வேண்டும். நான் முகத்தை மூடிட்டு இருக்கேன். அவன் என் ரிப்ஸ்-ல் அடித்து கொண்டிருக்கிறான். நான் போதும், போதும் என சொல்லிகொண்டே இருக்கிறேன்.

அவன் அந்த பாக்ஸிங் ரேஞ்சில் இருந்து மாறவில்லை. அவன் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்-ற்கு கூட செல்லலாம். 4 வருடமாக டிரெய்னிங் எடுத்துகொண்டான். அவன் போட்டிக்கு செல்லும் அளவு தகுதியில் இருக்கிறான்.

கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு சிறந்த எக்ஸ்பீரியன்சாக இது இருக்கும். இதை நாங்கள் இருவரும் மீண்டும் நடிப்பதற்கு பல காலம் எடுக்கும். நான் பாலா சார் செய்த ‘அவன் இவன், ஹரி சார் உடன் செய்த தாமிரபரணி போல், இந்த திரைப்படம் அதுவாக தானாக அமைந்தது.

படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படம் போல் இருக்கும். படத்தின் VFX, இசை என எல்லாம் இணைந்து படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது . படத்தை இசையுடன் பார்த்த பிறகு, நான் ஆனந்தை கட்டிபிடித்தேன். பிறகு வெளியே வந்து, தயாரிப்பாளர் வினோத்திடம் இந்த படத்தை தயவுசெய்து தியேட்டருக்கு கொண்டு வாருங்கள் என கூறினேன். நான் அவருக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்.

அவர் நினைத்திருந்தால், ஓடிடிக்கு கொடுத்து லாபம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் எங்களது கோரிக்கையை ஏற்று படத்தை புரிந்துகொண்டு, தியேட்டருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். படத்தில் கிளைமேக்ஸ் தான் சிறப்பாக இருக்கும். படபிடிப்பின் போது, இருவருக்கும் ரத்த காயம் தான் அதிகமாக ஏற்பட்டது. இருவரும் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை சென்று வருவோம்.

இருவரும் நண்பர்கள், ஆனால் திரையில் எப்படி சிரியஸாக நடித்தீர்கள்?

படத்தில் என் பெயர் சோழா. அவன் என்னை சோஜன் என அழைப்பான். படம் முழுவதும் அப்படியே இருக்கும். படத்தில் இயக்குனர் இருவருக்கும் சரிசமமாக இடம் கொடுத்துள்ளார். படத்தில் நான் ஆர்யாவிற்கு ஆலோசனை கூறுவேன். அவன் எனக்கு கூறுவான். இதன் பிறகு நாங்கள் மீண்டும் எதாவது படத்தில் சேர்ந்தால் அது இதை விட பெரியதாய் இருக்கும்.

படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் பற்றி தயாரிப்பாளர் கூறினார், நீங்கள் அதற்கு எதுவும் குரல் கொடுக்கவில்லையே?

குரல் கொடுக்கவில்லை என இல்லை. 10 வருடங்களுக்கு முன்னால் தீபாவளிக்கு 4 படங்கள் வரும் அப்போது 1200 தியேட்டர்கள் இருந்தன. இப்போது இயங்கும் தியேட்டர்கள் 900 தான் இருக்கும். தயாரிப்பாளர் வைத்த விண்ணப்பம் 250 தியேட்டர்கள் போதும் என நியாமான கோரிக்கையை தான் வைத்தார். தயாரிப்பாளர் வினோத் 250 தியேட்டர்கள் வேண்டும் என கேட்டதில் தவறில்லை.

இதற்காக பின்னர் நாங்கள் உதயநிதியிடம் பேசினோம். இப்போது உறுதியான தியேட்டர்களின் எண்ணிக்கை 242. கொஞ்ச நேரம் முன் தான் ஒரு தியேட்டர் உறுதியானது.

இப்போது சினிமாவில் சோலோ ரிலீஸ் என்பது வாய்ப்பே கிடையாது. ரஜினி சாருக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது அவர் படங்களின் பட்ஜெட் அப்படி, வியாபாரம் அப்படி.

இந்தப் படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்கேலில் தான் தயாரித்துள்ளோம், அதற்கான வெளீயீடும் இதற்கு தேவை அது இப்போது நடந்திருக்கிறது. சந்தோஷம்.

முன்பை போல் விஷாலை அதிகம் வெளியில் பார்க்க முடிவதில்லையே , உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்து விட நினைக்கிறீர்களா ?

அப்படியெல்லாம் இல்லை வேலையை எப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இப்போது நடிகர் சங்க வேலைகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். கூடிய விரைவில் இறுதி தீர்ப்பு வரப்போகிறது இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது. இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. கண்டிப்பாக அதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன்.

அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளியாக இருக்குமா ?

அஜித் சார் படம் பற்றி கேட்கிறீர்களா ? ( சிரித்து விட்டு) எனக்கே தெரியவில்லை. என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள். நடக்கும் போது அதுவே தானாக நடக்குமென நம்புகிறேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும்.

தொடர்ந்து உங்கள் சொந்த தயாரிப்பில் நடித்துவிட்டு, இப்போது வெளித்தயாரிப்பில் நடிப்பது எப்படி இருக்கிறது ?

ரொம்ப நன்றாக இருக்கிறது இப்போது அடுத்த படமும் வினோத் உடன் இணைகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் நடிகருக்கு ஒரு புரிதல் வேண்டும். அது வினோத்திடம் இருக்கிறது.

சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ரசித்து ரசித்து செய்கிறார். அவருடன் வருடம் ஒரு படம் செய்வதாக சத்தியம் செய்து தந்திருக்கிறேன்.

விஷால் ஃபிலிம் பேக்டரியில் ‘வீரமே வாகை சூடும்’ கிட்டதட்ட முடிந்து விட்டது. ஜனவரி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். வெளி தயாரிப்பிலும் நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமா நன்றாக இருக்கும்.

துப்பறிவாளன் 2 எப்போது ?

இதோ ஜனவரியில் மீண்டும் போகிறோம் ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும்.

அந்தப்படம் உங்கள் சொந்த தயாரிப்பாக இருக்குமா ?

கண்டிப்பாக VFF நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வெறும் 10000 ரூபாய் கையில் வைத்து கொண்டுதான் VFF ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வென்ஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி. எனக்கு நடந்த துரோகங்கள் கோப்பைகளில் தான் இந்த நிறுவனமே ஆரம்பித்தேன் இயக்குநர் தவறு செய்யும்போது அதை சரிசெய்ய வேண்டியது என் கடமை. துப்பறிவாளன் 2 வுக்கு அவரை லண்டனுக்கு கூட்டி சென்றிருக்க கூடாது அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்.

நிறைய துரோகங்கள், கூட இருந்தவர்களே குழி பறிப்பது இதைப்பற்றியெல்லாம் உங்கள் கருத்து ?
நல்ல விசயம் தான் அரசியலுக்கு வரும் முன்னர் இதைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிற விசயங்கள் பள்ளியிலோ புத்தகத்திலோ கிடைக்காது. இது மாதிரி சம்பங்கள் தான் பாடத்தை கற்றுக்கொடுக்கின்றது.

நடிகர் சங்கம் இந்த வருடம் நிறைவடைந்து விடுமா ?

ஒரு நாலுமாதம் டைம் கொடுத்திருந்தால் அப்போதே முடித்திருப்போம் அனைத்துமே முடிந்துவிட்டிருந்தது. இப்போது அதில் போட்டிருந்த கம்பிகளெல்லாம் துருப்பிடித்து கிடக்கிறது. இப்போது சரி செய்யவே 12 கோடி ஆகும். அதைப்பார்க்க அந்தப்பக்கம் போகவே கஷ்டமாக இருக்கிறது. இதோ தீர்ப்பு வரப்போகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் சீக்கிரமே முடிந்து விடும்.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் குடும்பத்துடன் கவனமாக கொண்டாடுங்கள்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Vishal’s emotional speech at Enemy press meet

More Articles
Follows