‘பிக் பாஸ் தமிழ் 6’ வீட்டில் நுழையும் பிரபல நட்சத்திரம். யாரென்று தெரிகிறதா ?

‘பிக் பாஸ் தமிழ் 6’ வீட்டில் நுழையும் பிரபல நட்சத்திரம். யாரென்று தெரிகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த வாரம் ‘பிக் பாஸ் 6’ இல் ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி இருப்பதாக அறிவித்து, ட்விட்டர் பயனர்கள் யார் என்று யூகிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நடிகை அஞ்சலி சிறப்பு விருந்தினராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்’ வீட்டிற்கு அஞ்சலி ஏன் செல்கிறார் என்று யோசிப்பவர்களுக்கு இதோ அதற்கான பதில்.

நடிகை அஞ்சலி டிசம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் ‘ஃபால்’ என்ற வலைத் தொடரில் நடிக்கிறார்.

அத்தொடரை விளம்பர படுத்துவதற்காக அஞ்சலியை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறது படக்குழு.

12 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்ட போகும் சூர்யா

12 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்ட போகும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ என்ற மாபெரும் படைப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் சூர்யா ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க கடுமையாக பயிற்சி எடுத்துவருகிறார்.

அவர் தனது பயிற்சியாளருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் பழங்கால போர்வீரராக நடிப்பதால் அவரது தோற்றம் மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கடைசியாக ‘7 ஆம் அறிவு’ (2011) படத்திற்காக சூரியா சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை நயன்தாரா தற்போது திரில்லர் படமான ‘கனெக்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், இப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

கனெக்ட்

Nayanthara’s ‘Connect’ trailer date announcement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா எஸ்கேயின் அம்மாவாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்கேக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

​​’மாவீரன்’ படத்தை பிப்ரவரி / மார்ச் இல் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் இப்படத்தின் படப்பிடிப்புகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

படத்தின் சாட்டிலைட் , டிஜிட்டல் உரிமைகள் முறையே சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் பெற்றுள்ளன.

விஜய் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாரா? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்

விஜய் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாரா? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நேற்று இரவு அவர்களின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டது.

அதில் வாரிசு படக்குழுவினர் ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கிறார் என்பதை இந்த சிறப்பு வீடியோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால் ‘லத்தி’ படத்தை மூன்று மொழிகளில் டப் செய்கிறார்

நடிகர் விஷால் ‘லத்தி’ படத்தை மூன்று மொழிகளில் டப் செய்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது விஷாலுக்கு பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டு காயங்கள் அடைந்தார்.

மேலும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விஷால் ‘லத்தி’ படத்தில் தனது பகுதிகளுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் குரல் கொடுத்துள்ளார்.

Vishal’s dubbing ‘Laththi’ in three languages

More Articles
Follows