மறக்க முடியாத பிறந்தநாள் பரிசை செந்திலுக்கு கொடுத்தார் சூர்யா

Suriyas Birthday gift to Comedy Actor Senthilவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் நடுவே செந்தில் அவர்களின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

அப்போது வாழைப்பழம் போன்ற கேக் ஒன்றை டிசைன் செய்து, அதை செந்திலுக்கு கொடுத்து மகிழ்வித்துள்ளார் சூர்யா.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த வாழைப்பழ காமெடி என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று.

அதை கொடுத்து தற்போது செந்திலின் இந்த பிறந்தநாளையும் மறக்கமுடியாமல் செய்துவிட்டனர் தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினர்.

Suriyas Birthday gift to Comedy Actor Senthil

Overall Rating : Not available

Latest Post