கீழடி அருங்காட்சியில் சூர்யா ஜோதிகா விசிட்.; தனிப்பட்ட நபருக்கு காவல்துறையா? என மக்கள் கேள்வி

கீழடி அருங்காட்சியில் சூர்யா ஜோதிகா விசிட்.; தனிப்பட்ட நபருக்கு காவல்துறையா? என மக்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் கீழடி கிராமம் உள்ளது.

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது.

இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு அகழாய்வு செய்து, ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலக் குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மார்ச் மாதம் 6-ம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இன்று ஏப்ரல் 1-ம் தேதி் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நடிகர் சிவகுமார் அவரது மகன் நடிகர் சூர்யா, மருமகள் நடிகை ஜோதிகா மற்றும் அவர்களது உறவினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமிதம்! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.

தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.. அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக!” என பதிவிட்டுள்ளார்.” என நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் வருகையை முன்னிட்டு அங்கு பார்வையிட வந்த பொதுமக்களை பல மணி நேரம் காவல்துறை காக்க வைத்ததாக கூறப்படுகிறது. ஒரு தனிப்பட்ட நபருக்காக எங்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? என அங்கு வந்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் காவல்துறை யாருக்கு வேலை செய்கிறது எனவும் மக்கள் கேட்கின்றனர்.

உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமதானா.?

சூர்யா - ஜோதிகா

Suriya Jyothika family visits Keeladi museum made controversy

ஏப்ரல் – மே மாதங்களில் சினிமா சூட்டிங் நடத்த தடை; அதிர்ச்சியில் திரையுலகம்

ஏப்ரல் – மே மாதங்களில் சினிமா சூட்டிங் நடத்த தடை; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடை என்றால் நாம் நினைவுக்கு முதலில் வருவது ஐஸ்கிரீம்.. இரண்டாவது நினைவுக்கு வருவது ஏதாவது குளிர் பிரதேசம்.

தமிழகத்தை பொறுத்தவரை வெயில் கொடுமையை சமாளிக்க ஊட்டிக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அதுவும் பள்ளி கல்லூரிகளின் விடுமுறை காலம் என்பதால் ஊட்டியில் லட்சக்கணக்கான மக்கள் அந்த காலங்களில் கூடுவது வழக்கம்.

அங்கு கண்களுக்கு குளிர்ச்சியாக பல பூக்கள் பூங்காக்கள் உள்ளன. சில இடங்களில் நீர்வீழ்ச்சியும் உள்ளன.

பொதுமக்கள் அங்கே அதிகம் கூடுவதால் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் சினிமா படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி உள்ளது தோட்டக்கலைத்துறை.

இந்த நடைமுறை இன்று ஏப்ரல் 1 முதல் ஊட்டியில் நடைமுறைக்கு வருகிறது.

கூடுதல் தகவல்…

ஊட்டி – நீலகிரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ரூ.50 ஆயிரம் கட்டணமும் தேயிலை பூங்காவில் ரூ.25 ஆயிரம் சூட்டிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Govt banned cinema shooting at April and May months

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்.; இதுதான் உண்மையான காரணமா?

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்.; இதுதான் உண்மையான காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் காமெடி செய்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர்.

இவர் விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் குண்டாக காணப்படும் ரோபோ சங்கர் அண்மைக்காலமாக உடல் மெலிந்து காணப்படுகிறார்.

எனவே அவருக்கு என்ன பிரச்சனை.? என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களை கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரோபோ சங்கர் நடித்து வரும் புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

மேலும் அவருக்கு சமீபத்தில் டைபாய்டு ஜூரம் வந்ததால் உடல் குறைந்து அவர் டயர்ட்டாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

robo shankar revealed the secret behind his weight loss

விஜய் பட இயக்குநரை வரவேற்று ரஜினி பட இயக்குநரை இழிவுப்படுத்திய விகடன்

விஜய் பட இயக்குநரை வரவேற்று ரஜினி பட இயக்குநரை இழிவுப்படுத்திய விகடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு முன்பு ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் ‘பீஸ்ட்’ படத்துக்கு பின்னர் சமூக வலைத்தளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தார்.

அதிலும் ‘விக்ரம்’ படம் வெளியான போது லோகேஷை பாராட்டியவர்களை விட நெல்சனை கேலி செய்தவர்களே அதிகம்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் விருது விழா ஒன்றில் நெல்சன் மற்றும் லோகேஷ் இருவரும் வரவேற்கப்பட்டு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது.

இவ்விழாவில் லோகேஷை மட்டும் பாடி கார்ட்ஸ் அழைத்து சென்றனர். ஆனால், நெல்சன் மட்டும் யாரும் இல்லாமல் தனியாக சென்றார்.

இங்கே தொடர் வெற்றிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் இயக்குனர்களிடையே பாரபட்சம் காட்டுகின்றனர் எனவும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Nelson Dilipkumar insulted in Ananda Vikatan award event

இந்தியன் 2 சூட்டிங்..; கமல்ஹாசனே கொடுத்த செம அப்டேட்

இந்தியன் 2 சூட்டிங்..; கமல்ஹாசனே கொடுத்த செம அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கமல் தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக நேற்று இரவு தைவான் சென்றார்.

விமான நிலையத்தில் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியன் 2’ படத்திற்காக தைவான் புறப்படுகிறேன்’ என கமல் ட்வீட் செய்தார்.

மேலும், இப்படத்தின் டப்பிங் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து, அதன்பிறகு பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்றும், அதன் பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்

Kamal Haasan heads to Taiwan for ‘Indian 2’ shooting

‘விடுதலை’ ஆன முதல் நாளே வெற்றியை கொண்டாடிய வெற்றி.; இளையராஜாவுக்கு நன்றி

‘விடுதலை’ ஆன முதல் நாளே வெற்றியை கொண்டாடிய வெற்றி.; இளையராஜாவுக்கு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மார்ச் 31 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது.

இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இவர்களுடன் பவானி ஸ்ரீ, கௌதமேனன், சேத்தன், மூணார் ரமேஷ், ராஜூவ்மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் இளையராஜா வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக அமைந்தது.

இந்தப் படத்தை பார்த்த பல்வேறு தரப்பினரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து பாராட்டி வருகின்றனர். நேற்று படம் வெளியான முதல் நாளிலேயே படக்குழுவினர் தங்களது வெற்றியை தயாரிப்பாளர் எல்ரெட் குமாருடன் இணைந்து கொண்டாடினர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் அமைந்திருந்தது.

இதனை முன்னிட்டு இன்று இளையராஜாவை சந்தித்து தங்கள் நன்றியை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தெரிவித்தனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vetrimaaran thanked Ilayara for his contribution in Viduthalai

More Articles
Follows