ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா

ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா

New Project (7)நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் நல்ல மார்கெட் உள்ளது. அவருக்கும் அங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பற்றிய வாழ்க்கை படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆந்திர முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் தயாரானது. அதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக சூர்யா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து சூர்யா கூறியதாவது..

நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை.

ஜெகன் அண்ணாவுடன் நல்ல நட்பு இருக்கிறது. அண்ணா முதல்வராகி இருப்பதில் மகிழ்ச்சி.

ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விருப்பம் உள்ளது”. என கூறியுள்ளார்.

100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

100 முறை ரத்ததானம் செய்த மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

New Project (6)நம்மில் பலர் ரத்ததானம் செய்யவே பயப்படுகிறார்கள். ரத்ததானம் பற்றி நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒரு சில இளைஞர்களே இதை செய்து வருகின்றனர்.

ஆனால் பிரகாஷ் என்ற மாற்றுத் திறனாளி 100 தடவைக்கு மேல் ரத்ததானம் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

ஒரு மாற்றுத்திறனாளி இந்த அளவிற்கு ரத்ததானம் செய்ததில்லை என கூறப்படுகிறது.

அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார்.

இதுகுறித்து பிரகாஷ் கூறியதாவது:

நான் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் எப்போதுமே உண்டு.

இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து ரத்ததானம் மற்றும் உடல்தான விழிப்புணர்வும் செய்துள்ளேன்.

எனவே எனக்கு சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளனர். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த சாதனை சான்றிதழை ரஜினி அவர்கள் கையால் வாங்க விரும்பினேன்.

இதை மன்றம் மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் என்னை அழைத்து பாராட்டினார். அவர் கையால் அந்த சாதனை சான்றிதழை பெற்றுக் கொண்டேன்.” என்றார்.

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

ரம்ஜான் ரிலீஸ் தேதியில் இருந்து தள்ளிப்போன ‘கொலைகாரன்’

New Project (5)விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவரும் இணைந்துள்ள படம் கொலைகாரன் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஆஷ்மிகா நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை தியா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனஞ்செயன் அவர்கள் படத்தை வெளியிடுகிறார்.

நாளை ரம்ஜானை முன்னிட்டு ஜூன் 5-ந்தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஜூன் 7-ந்தேதி (வழக்கம்போல வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

காலா 2 படம் குறித்து டைரக்டர் ரஞ்சித் ஓபன் டாக்

New Project (4)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

அதன்பின்னர் அவர் தமிழ் படங்கள் இயக்காமல் படங்களை தயாரித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் தினேஷ் நடிக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது…

காலா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்டனர்.

காலா 2 படம் இயக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அதுபோன்ற படங்கள் இனி அதிகம் வரும்” என்றார்.

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

​பெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல! – சீறும் வில்லன் நடிகர்

New Project (3)இலங்கை திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வீர்சிங். கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முதன்முறையாக ‘அந்த நிமிடம்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இலங்கையில் சிறந்த நடிகர் மற்றும் பாப்புலர் ஆக்டர் என இரண்டு நேஷனல் அவார்டைத் தட்டிச் சென்றுள்ளார்.

குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ள ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளதோடு, இந்தப் படத்தின் கதைக் கருவும் வீர்சிங்கே தந்துள்ளார். தமிழ்த் திரையுலகில் நுழைந்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் வீர்சிங்.

மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஸ்ரீலங்காவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறேன்.. அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் அந்த நிமிடம் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன்..

இந்தப் படத்தின் கதைக்கருவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதைச் சொன்னதும் இதைப் படமாக்க முடிவு செய்தோம். நான் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவன்.

அதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என நினைப்பவன்.. அவர்கள் வெறும் விளையாட்டு பொம்மைகள் அல்ல.. அவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது என் மனதிலேயே ஊறிவிட்டது.

இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்கா மற்றும் தமிழ்நாடு என இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளது.. முன் ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்து இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில் குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன்.

தமிழில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்வதை மட்டுமே விரும்புகிறேன். நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன் என்கிறார் வீர்சிங்.

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் பற்றி பேசுகிறபோது, “முஸ்லீம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல.. இங்கே முஸ்லீம்கள், தமிழர்கள் என எல்லோரும் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறினால் இந்த நட்பு பாதிப்புக்கு உள்ளாகிறது ஒரே உலகம் ஒரே மக்கள்.. எல்லோருக்கும் இந்த உலகில் உயிர் வாழ உரிமை இருக்கும்போது, அவர்களைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்கிறார் வருத்தம் கலந்த வலியுடன்!

அந்த நிமிடம் படம் வெளியான பின் எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும் என்கிறார் வீர் சிங்….

ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன்

ரீ என்ட்ரி கொடுக்கும் ஜீவன்

New Project (2)அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.

நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.

அறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

More Articles
Follows