லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் அல்லது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக ரஜினியும் லோகேஷ் கனகராஜும் இணையவுள்ளதாக சொல்ல படுகிறது.

இதனிடையே தற்போது பிரபல டோலிவுட் இயக்குனர் கே.எஸ் ரவீந்திரா உடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டம் லோகேஷ் படத்திற்கு முன்பே தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரவீந்திரா தெலுங்கில் ரவி தேஜாவின் ‘டான் சீனு’ மற்றும் பவன் கல்யாணின் ‘சர்தார் கப்பர் சிங்’, ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ மற்றும் சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரையா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Superstar Rajinikanth chooses this director before Lokesh Kanagaraj ?

‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ போஸ்டரை சாதி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்டனர்.

‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ போஸ்டரை சாதி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்டனர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்கள் நடிப்பில் ‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ எனும் படம் தயாராகி வருகிறது,

இப்படத்தை மெரினா புரட்சி, முத்துநகர் படுகொலை போன்ற படங்களை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் நாச்சியாள் சுகந்தி தயாரிக்கிறார்,

மெரினா புரட்சி முத்து நகர் படுகொலை போன்ற படங்களை இயக்கிய M.S. ராஜ் இப்படத்தை இயக்குகிறார்..

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எம் எஸ் ராஜ் கூறுகையில்…

அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆம் ஆண்டு நெருங்கும் சூழலிலும் அட்டவணை சாதி மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகளையும் அரசாங்கங்களின் தோல்விகளையும் துணிச்சலுடன் அலசும் படமாக இந்த அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் படம் இருக்கும்.

இதில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு அன்பு சரத் இசை ராம் பிரபு படத்தொகுப்பு ஜாவேத் அஷ்ரப், சப்தம் ஜே எப் சேவியர் பாடல்கள் பாரதிக்கனல் , இணை தயாரிப்பு சாவண்ணா மகேந்திரன் மற்றும் ஆதிமூலப் பெருமாள்.

இப்படம் தஞ்சாவூர், ஏர்வாடி, மதுரை மற்றும் மும்பையில் படமாக்க பட்டுள்ளது..

நான் இதற்கு முன்பு இயக்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி அரசியலை சொல்லும் மெரினா புரட்சி என்ற ஆவணப்படம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய படுகொலையின் பின்னணியை சொல்லும் முத்துநகர் படுகொலை ஆவண படத்திற்க்கும் நீங்கள் பேராதரவு தந்தீர்கள்,
மெரினா புரட்சி நார்வே திரைப்பட விழா விருது, மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகளையும் வென்றது.

முத்துநகர் படுகொலை டெல்லி தாதா சாகிப் திரைப்பட விழா விருது, வேர்ல்ட் கார்னிவல் சிங்கப்பூர் விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது மற்றும் பங்காளதேஸ் சினிமா கிங் சர்வதேச திரைப்பட விழா விருது என நான்கு விருதுகளை வென்றது உங்களுக்கு தெரியும்..

இந்த படத்தின் தலைப்பை
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வேங்கைவயல் பட்டியல் இனத்து மக்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போராடி வரும் திருப்பத்தூர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் திரு சுடலை மாடனின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர்.

Victim released Ambedkar Ennudan Pesugiraar movie poster

ஆடுகளம் – அல்லு அர்ஜுன்.. வடசென்னை – மகேஷ்பாபு.. அசுரன் – ஜூனியர் என்டிஆர்.; வெற்றிமாறன் சுவாரசிய பதில்கள்

ஆடுகளம் – அல்லு அர்ஜுன்.. வடசென்னை – மகேஷ்பாபு.. அசுரன் – ஜூனியர் என்டிஆர்.; வெற்றிமாறன் சுவாரசிய பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ கடந்த மார்ச் 31ல் தமிழில் வெளியானது.

இதன் பின்னர் ‘விடுதலை பாகம் 1’ பட தெலுங்கு வெர்ஷன் சிறப்புக் காட்சி அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

அப்போது வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது.., “ஆடுகளம் படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனைச் சந்தித்தேன்.

அவர் தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தார். என்னிடம் கதை ஏதும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

அப்போது ‘வடசென்னை’ படத்தில், அவருக்கான கதாபாத்திரம் குறித்து சொன்னேன். ஆனால், அது சரியாக அமையவில்லை.

அதன்பின்னர் மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். கதை சொன்னேன். ஆனால் அதுவும் ஒத்துவரவில்லை.

அசுரன் படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆரைச் சந்தித்தேன். விரைவில் நிச்சயம் ஒரு படம் சேர்ந்து செய்வோம்.

நான் ஸ்டார் வேல்யூக்காகவோ படம் செய்ய மாட்டேன். கதைக்காகத்தான் படம்.

என் கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

Vetrimaaran talks about working with telugu actors

புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சந்தானம்

புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானத்தின் வழக்கமான இயக்குனர் ராம் பாலாவின் முன்னாள் அசோசியேட்டான பிரேம் ஆனந்துடன் இந்த முறை சந்தானம் இணைந்துள்ளார்.

இது மீண்டும் ஒரு திகில் காமெடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது .

ப்ரோமோ டீஸர் மூலம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என டைட்டிலை அறிவித்த படக்குழு இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.

1.5 நிமிட நீளமான வீடியோவில் சந்தானமும் அவரது கும்பலும் கட்டிடத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது.

டிடி ரிட்டர்ன்ஸில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Santhanam reveals the first look poster and title reveal teaser of his next film!

ஒரே படத்தில் நடிகர்களாக இணையும் லோகேஷ் மற்றும் அனிருத்

ஒரே படத்தில் நடிகர்களாக இணையும் லோகேஷ் மற்றும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இதே படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் அறிமுகப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் இரட்டையர் அன்பரிவ் இயக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் தனது படங்களில் அனிருத் மற்றும் அன்பரிவ் ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Lokesh and anirudh make acting debut in new films

‘பவுடர்’ புகழ் லியாண்டர் லீ இசையில் ஜோடியில்லாமல் ஆடும் பிரபுதேவா

‘பவுடர்’ புகழ் லியாண்டர் லீ இசையில் ஜோடியில்லாமல் ஆடும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இவர் விஜய் ஸ்ரீஜி இயக்கிய ‘தாதா 87’ & ‘பவுடர்’ & விரைவில் வெளியாகவுள்ள ‘ஹரா’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.

இதனிடையே பிரபுதேவாவிற்கு முதன்முறையாக ஃபோக் மார்லி பாடகர் அந்தோணி தாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதால் இந்த பாடலுக்கும், பாடலுக்கான காணொளிக்கும் பெரும் எதிர்பார்ப்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முசாசி

Prabhu Deva dances to Leander Lee music

More Articles
Follows