தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ மற்றும், ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
இந்த இரு படங்களுக்குமே நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.
படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வருகிறார்.
செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Super Singer Finalist Srikanth Makes His Debut Singing For Genius