தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்து வருபவர்களில் முக்கியமான இயக்குனர் சுசீந்திரன்.
இவர் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து சுசீந்திரன் கூறியதாவது…
குழந்தைகளுடன் நடித்த அனுபவம் அருமையாக இருந்தது. குழந்தை அக்ஷித்தா நன்றாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் செய்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.