இனிமே OMG-ன்னா ‘OH MY GHOST’… அதிர்ச்சி தர ரெடியாகும் சன்னி லியோன்

இனிமே OMG-ன்னா ‘OH MY GHOST’… அதிர்ச்சி தர ரெடியாகும் சன்னி லியோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS சார்பில் D. வீரா சக்தி & K. சசிகுமார் வழங்க, வரலாற்று பின்னணியில், நடிகை சன்னி லியோன் நடிக்கும், ஹாரர் காமெடி திரைப்படம், “OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட்”.

நடிகை சன்னி லியோன் தமிழ் திரையுலகில், வரலாற்று பின்னணியில், உருவாகும் ஹாரர் காமெடி படம் மூலம், தன் திரைப்பயனத்தை துவங்குகிறார்.

இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் பரபரப்பை கிளப்பி வரும் இப்படத்திற்கு “OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

VAU Media Entertainment, சார்பில் D. வீரா சக்தி படத்தலைப்பு குறித்து கூறியதாவது..

“பொதுவாக, OMG (OH MY GOD) என்பது இன்று அனைவரிடமும் வழக்கத்தில் புழங்ககூடிய ஒரு முக்கியமான வார்த்தை பிரயோகம் ஆகும்.

மேலும் உரையாடலின் போது ஆச்சரியமான எந்த ஒன்றையும் தெரிவிக்கும் போது OMG (OH MY GOD) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் திரைப்படமும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விசயங்களை கொண்டிருப்பதால், OMG – OH MY GHOST, தலைப்பு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.
ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை இப்படத்தில் பார்ப்பார்கள்.

இப்படம் இதுவரையிலும் நாம் திரையில் கண்டிராத ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தை தரும் என்றார்.

சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘சிந்தனை செய்’ படத்தை இயக்கி, புகழ் பெற்ற இயக்குநர் R.யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS சார்பில், D. வீரா சக்தி & K. சசிகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

“OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட் ” படத்தின் படப்பிடிப்பு மிக கோலகலமாக நடந்து வருகிறது. விரைவில் நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

SUNNY LEONE STARRER HORROR-COMEDY WITH HISTORICAL BACKDROP TITLED ‘OH MY GHOST’ (OMG)

இஷான் வரலட்சுமி நடிக்க இரத்த தடங்களுடன் ‘தத்வமசி’ கான்செப்ட் போஸ்டர் வெளியீடு

இஷான் வரலட்சுமி நடிக்க இரத்த தடங்களுடன் ‘தத்வமசி’ கான்செப்ட் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும்.

பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.

தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும். தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது. குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது.

“மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன.

மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

தத்வமசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும்.

விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய. மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படும்.

நடிப்பு: இஷான், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன்

தொழில்நுட்ப குழு:

எழுத்து & இயக்கம்: ரமணா கோபிசெட்டி
தயாரிப்பாளர்: ராதாகிருஷ்ணா தெலு
பேனர்: RES என்டர்டெயின்மென்ட் LLP.
இசை: சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு: ஷ்யாம் கே நாயுடு
படத்தொகுப்பு: மார்த்தாண்ட் கே வெங்கடேஷ்
பாடல்கள்: சந்திரபோஸ்
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

Actress Varalaxmi’s next film is titled Thathvamasi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாகும் விஜய்சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாகும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை பிரபல இயக்குனர்கள் பலர் இணைந்து தொடங்கியுள்ளனர் என்பதை பார்த்தோம்.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இந்த புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக முன்னனி இயக்குனர் ஒருவர் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பான அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கலாம்.

கமல்ஹாசன் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

முன்னணி நாயகனாக இருந்த போதும் ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படங்களில் விஜய்சேதுபதியை வில்லனாக்கி பார்த்தார் லோகேஷ்.

எனவே தற்போது முதன்முறையாக விஜய்சேதுபதியை ஹீரோவாக்கவுள்ளார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi plays lead role in Lokesh next film

ரஜினி ரசிகராக மாறிய ஹர்பஜன் சிங்..; வாய்ஸ் கொடுக்கும் சிம்பு

ரஜினி ரசிகராக மாறிய ஹர்பஜன் சிங்..; வாய்ஸ் கொடுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிரெண்ட்ஷிப்’ என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகனாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகமாகிறார்.

அவருடன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் லொஸ்லியா.

இரட்டை இயக்குனர்களான ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து, இயக்கியுள்ள படம் இது.

இவர்கள் ஏற்கெனவே சென்னையில் ஒருநாள் 2, அக்னி தேவ் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜூனும், சதீஷூம் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், மறைந்த நடிகர் சுபா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹர்பஜன் சிங் தீவிர ரஜினி ரசிகராக நடிக்க இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

கிரிக்கெட்டரே ஹீரோவாக நடிப்பதால் அவருக்கேற்ற வகையில் கிரிக்கெட் விளையாடும் காட்சியும் உள்ளதாம்.

சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம். உதயகுமார் இசையமைக்கிறார்.

தற்போது கொரோனா ஊரடங்குகளை நீக்கி தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், பிரெண்ட்ஷிப் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.

கல்லூரி நண்பர்கள் 5 பேருக்கு இடையே இருக்கும் நட்பு தான் படத்தின் கதையாம். இந்த 5 பேரில் லாஸ்லியா மட்டுமே பெண். படத்தில் மிக முக்கியமான சமூக கருத்து ஒன்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்த படம் வந்தபிறகு ஆண் பெண் நட்புக்கே இன்னொரு முகம் கிடைக்கும். என்கிறார்கள் படக்குழுவினர்.

Harbhajan Singh plays die hard Rajini fan in Friendship

இந்தியா டிரெண்டிங்கில் அசத்தும் ஆர்யாவின் அரண்மனை-3..: ஓடிடியை ஓரங்கட்டிய குஷ்பு சுந்தர்

இந்தியா டிரெண்டிங்கில் அசத்தும் ஆர்யாவின் அரண்மனை-3..: ஓடிடியை ஓரங்கட்டிய குஷ்பு சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் #அரண்மனை திரைப்படம்.

நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் ஒன்று வெளியானது .

ஆர்யா-ராஷிகண்ணா பங்கு பெற்ற இந்த பாடல் நேற்று இந்தியா டிரட்ண்டிங்கில் பரபரப்பானது.

இயக்குநர் சுந்தர்.சி இன் இந்த பிரமாண்ட பாடல் காட்சி You tube 1M ஒன் மில்லியன் கிராஸ் வெற்றி கண்டது.

இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர் சி.

இந்த நிலையில் திரைத்துறையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையரங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என்றனர்.

இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.

அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.

படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்/தளபதி தினேஷ் / பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்

Sundar C’s Aranmanai 3 song trending in india

மஹத் – ஐஸ்வர்யா தத்தா காதல் ஜோடிக்கு வில்லனாகும் ஆதவ்

மஹத் – ஐஸ்வர்யா தத்தா காதல் ஜோடிக்கு வில்லனாகும் ஆதவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா, தத்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”.

இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு உடல் ரீதியாகவும், தோற்றத்திலும் ஒரு வலுவான எதிரியை கோரியதால், படக்குழு பொருத்தமான நடிகரை தேடி வந்தது. அந்த வகையில் ஆதவ் நன்கு கட்டமைக்கப்பட்ட உடல் தகுதியுடனும், கவர்ச்சிகரமான ஆளுமையுடனும், எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவராக அமைந்தார்.

பல திறமைகளைக் கொண்ட ஆதவ், நடிப்பு, மாடலிங், மேடை நாடக நடிப்பு, கால்பந்து, குத்துச்சண்டை, ஸ்டண்ட் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.

இரண்டு ஆண்கள் (கதாநாயகன் மஹத் மற்றும் ஆதவ்), ஒரே பெண் (ஐஸ்வர்யா தத்தா) மீது காதலில் விழுகிறார்கள். அதில் நாயகி ஆதவ் பாத்திரத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்க, ஆளுமை மிக்க அந்த எதிர் நாயகனை கடந்து, நாயகன் எவ்வாறு காதலியை கரம்பிடிக்கிறான் என்பதே கதை. பல முன்னணி கலைஞர்கள் பங்களிப்பில் காதல் காமெடி கலந்த அட்டகாசமான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது..

Mahath and Aishwarya Dutta joins for a new romantic film

More Articles
Follows